டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி வைத்திருந்த மாபெரும் சாதனையை முறியடித்த பாபர் அசாம் – குவியும் வாழ்த்துக்கள்

Babar-Azam-and-Virat-Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்ற முடியும் தொடர்களின் அடிப்படையில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்திய டி20 கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மிகப்பெரிய சாதனை ஒன்றினை தற்போது முறியடித்துள்ளார்.

Virat Kohli Babar Azam

- Advertisement -

அதன்படி தற்போதைய டி20 கிரிக்கெட்டின் தரவரிசை பட்டியலில் 818 புள்ளிகளுடன் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவரை தொடர்ந்து பாகிஸ்தானை சேர்ந்த மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான் 794 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அதே வேளையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக டி20 கிரிக்கெட்டில் பெரிய சரிவினை சந்தித்து தற்போது 21-வது இடத்தில் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே விராட் கோலி ரன் குவிப்பதில் மிகப்பெரும் சிரமத்தை சந்தித்து வரும் வேளையில் பாபர் அசாம் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் ரன்களை குவித்து அசத்தி வருகிறார் .

azam 1

அதன்படி தற்போது டி20 கிரிக்கெட்டிலும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாபர் அசாம் விராட் கோலியின் மிகப்பெரிய டி20 ரெக்கார்டு ஒன்றினை தற்போது முறியடித்துள்ளார். அதன்படி இதுவரை டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக அதிக நாட்கள் நீடித்தவர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருந்த விராட் கோலியின் சாதனையை அவர் தற்போது தகர்த்துள்ளார்.

- Advertisement -

அதன்படி விராட் கோலி டி20 கிரிக்கெட் தரவரிசையில் 1013 நாட்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்து நெடுநாள் நம்பர் ஒன் வீரராக இருந்த சாதனையை தன் வசம் வைத்திருந்தார். அதனை தற்போது முறியடித்துள்ள பாபர் அசாம் 1013 நாட்களையும் கடந்து தற்போது முதலிடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs IRE : ரசிகர்களின் மெகா ஆதரவுடன் நீண்டநாள் கனவை நிஜமாக்கிய இந்திய வீரர் – முன்னாள் வீரர்கள் வாழ்த்து

விராட் கோலிக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ள வேளையில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் துவக்க வீரரான இஷான் கிஷன் ஏழாவது இடத்திலும், கே.எல் ராகுல் 17 வது இடத்திலும், கேப்டன் ரோஹித் சர்மா 19-ஆவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement