பாவங்க பஞ்சாப்.. தேவையா இது? ஸ்ரேயாஸின் ரிவர்ஸ் உல்ட்டா பேட்டிங்கால் 67/6 என விழுந்து எஸ்கேப்பான மும்பை

Shreyas Iyer
- Advertisement -

இந்தியாவில் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான 2024 – 25 விஜய் ஹசாரக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதில் டிசம்பர் 23ஆம் தேதி அகமதாபாத் நகரில் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் தடுமாற்றமாக விளையாடி 38.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தன்மய் அகர்வால் 64, ஆரவல்லி அவினாஷ் 52 ரன்கள் எடுத்தார்கள். மும்பைக்கு அதிகபட்சமாக அன்கோலேகர் 4, ஆயுஷ் மாத்ரே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

- Advertisement -

உல்ட்டா பேட்டிங்:

பின்னர் வெறும் 170 என்ற சுலபமான இலக்கை துரத்திய மும்பை வேடிக்கையான முடிவை எடுத்தது. அதாவது எப்போதுமே ஒரு அணியில் நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர்கள் முதலாவதாக களமிறங்குவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங் தெரியாதவர்களும் பவுலர்களும் கீழே களமிறங்குவார்கள். ஆனால் இப்போட்டியில் இலக்கை குறைவாகத் தானே இருக்கிறது எப்படியும் வென்று விடலாம் என்று கருதிய மும்பை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் வரிசையை உல்டாவாக மாற்றி களமிறக்கினார்.

ஆனால் அந்த ஐடியா கடைசியில் சொதப்பலாக முடிந்தது. ஏனெனில் துவக்க வீரர்களாக களமிறங்கிய மும்பை பவுலர்கள் அங்குரிஸ் ரகுவன்ஷி 19, ஆயுஷ் மாத்ரே 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். அடுத்து வந்த ஹர்திக் தாமோர் 0, சூர்யன்ஸ் செட்ஜ் 6, அன்கோலேகர் 5, சர்துள் தாக்கூர் 0 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

எஸ்கேப்பான மும்பை:

அதனால் 67-6 என மும்பை ஆரம்பத்திலேயே விழுந்தது. அப்போது 8வது இடத்தில் வந்த சூரியகுமார் யாதவ் திணறலாக விளையாடி 18 ரன்னில் பெவிலியன் சென்றார். இருப்பினும் அடுத்ததாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 44* (20) ரன்கள் விளாசி தனது சுமாரான முடிவிலிருந்து மும்பையை காப்பாற்றினார். அவருடன் சேர்ந்து விளையாடிய டானுஷ் கோட்டியான் 39* ரன்கள் எடுத்ததால் 25.2 ஓவரில் 175-7 ரன்களை எடுத்த மும்பை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தோல்வியிலிருந்து தப்பியது.

இதையும் படிங்க: இதனால தான் தோனி தனித்துவனமானவர்.. தேஷ்பாண்டேவை வெச்சே ஜெய்க்க இதான் காரணம்.. அஸ்வின் பேட்டி

சிவம் துபே 10வது இடத்தில் விளையாடுவதற்காக பேட்டை வைத்துக்கொண்டு காத்திருந்தார். ஹைதராபாத்துக்கு அதிகபட்சமாக சரனு நிஷாந்த் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. அதைப் பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் தேவையா? என்று ஸ்ரேயாஸ் ஐயரை சாடுகிறார்கள். மேலும் 2025 ஐபிஎல் தொடரில் ஏற்கனவே ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் திணறும் பாவமான பஞ்சாப்பை அவர் எப்படி வழிநடத்த போகிறாரோ? என்றும் ரசிகர்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement