இதனால தான் தோனி தனித்துவனமானவர்.. தேஷ்பாண்டேவை வெச்சே ஜெய்க்க இதான் காரணம்.. அஸ்வின் பேட்டி

Ashwin MS Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 38 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 2வது விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு பெரிய ரவுண்ட் வருவதற்கு முக்கிய காரணமான சிஎஸ்கே அணிக்காக மீண்டும் அஸ்வின் விளையாட உள்ளார்.

ஏனெனில் சென்னையை சேர்ந்த அவர் 2010, 2011 ஐபிஎல் கோப்பைகளை தோனி தலைமையில் சிஎஸ்கே வெல்ல உதவினார். அதனால் அப்போதைய கேப்டன் தோனி அவருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பை கொடுத்தார். அந்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் இன்று ஜாம்பவானாக ஓய்வு பெற்றுள்ளார் என்றே சொல்லலாம். முன்னதாக 2023 ஐபிஎல் தொடரில் துசார் தேஷ்பாண்டே சிஎஸ்கே அணிக்காக பந்து வீசி ரன்களை வாரி வழங்கினார்.

- Advertisement -

தேஷ்பாண்டே வெச்சு:

அதனால் அவரை அணியிலிருந்து நீக்குமாறு சிஎஸ்கே ரசிகர்களே விமர்சித்தார்கள். ஆனால் அவரையும் வைத்து தோனி 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்தார். அது பற்றியும் மற்ற கேப்டன்களில் இருந்து தோனி எவ்வளவு தனித்துவமானவர் என்பது பற்றியும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அஸ்வின் பேசியுள்ளார். இது பற்றி அஸ்வின் கூறியது பின்வருமாறு.

“தோனி பெரும்பாலான அடிப்படை விஷயங்களை சரியாக செய்கிறார். மற்ற கேப்டன்கள் அடிப்படை விஷயங்களை தவற விடுகிறார்கள். அது அவர்களின் விளையாட்டை கடினமாக்குகிறது. தோனி பெரும்பாலும் கோபப்படமாட்டார். எடுத்துக்காட்டாக உங்களுடைய ஃபீல்டை எடுத்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் பந்து வீசுங்கள் என்று சொல்லி தான் அவர் பவுலர்களின் கையில் பந்தை கொடுப்பார்”

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:

“ஆனால் புதிதாக பேட்ஸ்மேன் களத்திற்குள் வந்ததும் நீங்கள் சுமாரான பந்தை வீசினால் அதை தோனி வெறுப்பார். இவ்வளவு வருடங்கள் விளையாடியதில் பெரும்பாலான மக்கள் கிரிக்கெட்டின் அடிப்படைகளை மறந்து விட்டார்கள் என்பதை நான் உணர்கிறேன். ஆனால் எம்.எஸ். தோனி அந்த அடிப்படைகளை எப்போதும் எளிமையாக வைத்திருப்பார். கடந்த ஐபிஎல் தொடரில் துசார் தேஷ்பாண்டேவிடம் இருந்து அவர் சிறந்த செயல்பாடுகளை கொண்டு வந்தார்”

இதையும் படிங்க: யார் இந்த தனுஷ் கோட்டியான்? இந்திய அணியில் அவர் இடம்பிடிக்க என்ன காரணம்? – விவரம் இதோ

“அதைப்பற்றி மக்களும் பேசினார்கள். அவரிடம் தோனி என்ன சொல்லியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். “மைதானத்தின் பவுண்டரி பெரிதாக இருக்கும் பக்கத்தில் அடிவாங்குங்கள். கடந்த போட்டியில் கொடுத்ததை விட இம்முறை 2 ரன்கள் குறைவாக கொடுங்கள் போதும் என்று தேஷ்பாண்டேவிடம் அவர் கூறியிருப்பார். அது பவுலர்கள் மீதான அழுத்தத்தை குறைத்து சிறிய இலக்கை வைத்து அசத்த உதவும். அந்த வகையில் தோனி மற்றவர்களை விட எளிமையான விஷயங்களை தினமும் பின்பற்றுகிறார்” என்று கூறினார்.

Advertisement