மும்பை அணியில் இருந்து ரோஹித் சர்மா வெளியேறினால் அவரை வாங்க 2 டீம் 20 கோடியோடு ரெடியா இருக்காங்க – விவரம் இதோ

Rohit
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை அந்த அணியின் நிர்வாகம் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து கழட்டிவிட்டது. அவருக்கு பதிலாக குஜராத் அணியில் இருந்து டிரேடிங் மூலம் கொண்டுவரப்பட்ட பாண்டியாவிற்கு கேப்டன்சி வாய்ப்பு வழங்கப்பட்டது.

மும்பை அணியில் இருந்து வெளியேறும் ரோஹித் சர்மா :

இருப்பினும் பாண்டியா தலைமையிலான மும்பை அணியானது நடைபெற்று முடிந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளிலே மோசமான தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தினை பிடித்து வெளியேறி இருந்தது. இதன் காரணமாக மும்பை அணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

- Advertisement -

அதோடு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ரோகித் சர்மாவிற்கு அதிருப்தியை ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவர் அடுத்த 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேறி மெகா ஏலத்தில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை மும்பை அணி தக்கவைக்க நினைத்தும் ரோகித் மும்பை அணியில் இருந்து வெளியேறினால் அவரை கோடிகளை கொட்டிக் கொடுத்து வாங்க இரண்டு அணிகள் தயாராக இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா வெளியேறும் பட்சத்தில் டெல்லி கேப்பிட்டல் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மெகா ஏலத்தில் 20 கோடி வரை கொடுத்து அவரை ஏலத்தில் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் 50 கோடி வரை அவருடைய மதிப்பு சென்றாலும் ஏலத்தில் எடுக்க அந்த இரண்டு அணிகளும் போட்டி போடும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியதால் ரோகித் சர்மாவின் மதிப்பு தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளதால் அவரை வாங்க இரு அணிகளும் தீவிரம் காட்டுகின்றன.

இதையும் அடிங்க : 5 விக்கெட்ஸ்.. 9க்கு 0.. இங்கிலாந்து வெற்றி.. வாயில் சொன்னதை செய்யாத இலங்கை.. 10 வருடமாக தொடரும் சோகம்

அதோடு அவர் அணிக்குள் வரும் பட்சத்தில் தங்களது அணிக்கு ரசிகர்கள் ஆதரவும் பெருகும் அதோடு கோப்பையை வெல்ல ஒரு பெரிய உத்வேகத்தை ரோகித் வழங்குவார் என்பதனாலும் அந்த 2 அணிகளும் அவரை வாங்க தயாராக இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement