இஷான் கிஷன் ஒருத்தருக்காக மல்லு கட்டும் 3 அணிகள்.. டிரேடிங் செய்ய காரணம் என்ன? – விவரம் இதோ

Ishan Kishan
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது மெகா ஏலத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட இஷான் கிஷன் அந்த அணிக்காக சதம் விளாசியிருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்க்கு பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. அதோடு விக்கெட் கீப்பிங்கிலும் அவர் சற்று சுமாராகவே செயல்பட்டதால் சன் ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் அவரை மினி ஏலத்திற்கு முன்னதாக வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இஷான் கிஷனை டிரேடிங் செய்ய காத்திருக்கும் பல்வேறு அணிகள் :

கடந்த ஆண்டு 15.25 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்ட அவர் மினி ஏலத்திற்கு வந்தால் நிச்சயம் அதற்கு இணையான தொகைக்கு ஏலத்திற்கு செல்வார் என்று தெரிகிறது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி மினி ஏலத்திற்கு முன்னதாகவே அவரை டிரேடிங் முறையில் வாங்க மூன்று அணிகள் சன் ரைசர்ஸ் அணியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் அவர் டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதனால் பல்வேறு அணிகள் இவருக்காக போட்டி போட காத்திருக்கின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதால் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டிரேடிங் செய்ய விருப்பப்படுகிறது.

அதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் விரைவில் ரோகித் சர்மாவை ஓரங்கட்டி விடும் என்பதனால் அவருக்கு பதிலாக டாப் ஆர்டரில் அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் தேவைப்படுவதால் தங்களது பழைய வீரரான இஷான் கிஷனை மீண்டும் டிரேடிங் முறையில் வாங்க முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதேபோன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கடந்த பல ஆண்டுகளாகவே சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாமல் தவித்து வரும் வேளையில் கே.எல் ராகுல் அந்த அணிக்காக ட்ரேட் செய்யப்படுவார் என்று பேசப்படுகிறது. ஒருவேளை கே.எல் ராகுலை அவர்களால் வாங்க முடியவில்லை என்றால் இஷான் கிஷனை கொல்கத்தா அணி நிர்வாகம் டிரேடிங் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : டிரேடிங் முறையில் வாஷிங்டன் சுந்தரை சி.எஸ்.கே அணிக்குள் கொண்டு வரும் நிர்வாகம் – எதற்கு தெரியுமா?

இப்படி மூன்று அணிகள் ஒரு வீரருக்காக டிரேடிங் செய்ய காத்திருக்கும் வேளையில் காவியா மாறன் என்ன முடிவு செய்வார் என்பது சஸ்பென்ஸ் ஆகவே இருந்து வருகிறது. இருந்தாலும் இளம் அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷன் ஒருவேளை டிரேடிங் முறையில் எந்த அணிக்கும் செல்லாமல் மினி ஏலத்திற்கு வந்தால் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் செல்வார் என்பது உறுதி.

Advertisement