கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது போட்டியானது இறுதிப்பந்து வரை விறுவிறுப்பாக சென்று அட்டகாசமாக நிறைவடைந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது துவக்கத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அற்புதமாக விளையாடி வந்தது.
கடவுள் எனக்கு குடுத்த வாய்ப்பு இது : முகுல் சவுத்ரி
இருந்தாலும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து பெரிய சரிவை சந்தித்தது. குறிப்பாக 16 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே அந்த அணி குவித்திருந்ததால் இந்த போட்டியிலும் லக்னோ அணி தோல்வியை சந்திக்கும் என்று பலரும் நினைத்து இருப்பார்கள். ஆனால் எட்டாவது விக்கெட்டுக்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகுல் சவுத்ரி மற்றும் ஆவேஷ் கான் ஆகியோரது ஜோடி 24 பந்துகளில் 54 ரன்கள் குவித்து அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்தது.
அதிலும் குறிப்பாக ஏழாவது வீரராக களமிறங்கிய முகுல் சவுத்ரி 27 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 54 ரன்கள் குவித்து அந்த அணியை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசியிருந்த ஆட்டநாயகன் முகுல் சவுத்ரி கூறியதாவது : என்னுடைய கிரிக்கெட் பயணம் நான் பிறப்பதற்கு முன்னதாகவே துவங்கி விட்டது.
ஏனெனில் எனது தந்தை நான் பெரிய கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்று விருப்பப்பட்டார். ஆனால் என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக 12-13 வயதில் தான் நான் கிரிக்கெட் பயிற்சிகளை முறையாக எடுக்க ஆரம்பித்தேன். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக ஜெய்ப்பூர் நகருக்கு இடம்பெயர்ந்து ஹையர் லெவல் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறேன். இந்த போட்டியில் நான் களமிறங்கும் போது மிகப்பெரிய அழுத்தம் இருந்தது. ஆனால் நான் அதனை பற்றி யோசிக்காமல் கடவுள் எனக்காக கொடுத்த வாய்ப்பாக இந்த போட்டியை பார்த்தேன்.
இதையும் படிங்க : நெட்ஸ்ல பாத்தத விட இப்போ மேட்ச்ல பாக்க ரொம்ப சூப்பரா இருக்கு – வெற்றிக்கு பின் ரிஷப் பண்ட் பாராட்டு
என்னுடைய திறன் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்று கொடுக்க வேண்டும் என்று நினைத்தே விளையாடினேன். அதேபோன்று பந்து என்னுடைய ஏரியாவில் வந்தால் நான் நிச்சயம் சிக்ஸ் அடிப்பதற்காக தயாராக இருந்தேன். இந்த போட்டியில் நான் அடித்த முதல் சிக்சர் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று என முகுல் சவுத்ரி கூறியது குறிப்பிடத்தக்கது.



