தென்னாப்பிரிக்காவில் விலைமதிப்பில்லாத அதை பும்ரா எனக்கு கொடுத்தாரு.. இங்கிலாந்து தொடருக்கு ரெடி.. முகேஷ் குமார்

mukesh kumar
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் யுக்தியை பயன்படுத்தி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் தங்களுடைய சொந்த மண்ணில் எப்போதுமே கில்லியாக செயல்படக்கூடிய இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வெல்லும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக சமீபத்தில் சவாலான தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் 55 ரன்களுக்கு சுருட்டி சிறப்பான வெற்றி பெற்ற இந்தியா 13 வருடங்கள் கழித்து அந்நாட்டில் தொடரை சமன் செய்தது.

- Advertisement -

பும்ராவின் ஆலோசனை:
எனவே அதே உத்வேகத்துடன் தங்களுடைய சொந்த ஊரில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் இங்கிலாந்தை வீழ்த்த இந்தியா தயாராகியுள்ளது. இந்நிலையில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் விளையாடிய தமக்கு யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசுவது பற்றி பும்ரா விலைமதிப்பற்ற ஆலோசனைகளை கொடுத்ததாக முகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் பெங்கால் அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடியுள்ள தமக்கு இந்திய அணியில் பும்ரா உதவுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி டெலிகிராஃப் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “பும்ரா பாய் எனக்கு யார்கர் பந்துகளை சரியாக வீசுவதில் தொடர்ந்து ஆலோசனைகளை கொடுத்துக் கொண்டே இருந்தார். குறிப்பாக நீங்கள் யார்கர் பந்துகளை நன்றாக வீசுகிறீர்கள். அதை அப்படியே செய்யுங்கள் என்று பும்ரா தன்னம்பிக்கை கொடுத்தார்”

- Advertisement -

“அப்படி நாங்கள் அடிக்கடி பேசுவோம். அது போன்ற நேரங்களில் அவர் பல்வேறு அம்சங்களில் என்னுடைய பந்து வீச்சில் முன்னேறுவதற்கு நிறைய பரிந்துரைகள் கொடுத்தார். கண்டிப்பாக அது விலைமதிப்பற்றதாகும். இந்திய அணிக்காக அவருடன் சேர்ந்து விளையாடுவது எனக்கு பெங்கால் அணியில் விளையாடுவது போன்ற வசதியை கொடுக்கிறது. ஏனெனில் பெங்கால் அணியில் நான் ஆகாஷ் தீப், இஷான் போரேல் ஆகியோருடன் சேர்ந்து ஆல் அவுட் செய்வதற்கு தேவையான பந்தை வீசலாமா அல்லது தொடர்ச்சியாக மெய்டன் ஓவர்களை வீசி அழுத்தத்தை கொடுக்கலாமா என்பது போல் விவாதித்து செயல்படுவோம்”

இதையும் படிங்க: 10 – 15 நொடிகள் வெய்ட் பண்ணியே கடுப்பாகிடும்.. சோயப் அக்தர் பவுலிங்கை நேருக்கு நேராக கலாய்த்த.. விரேந்தர் சேவாக்

“அதே போல கேப் டவுனில் நடைபெற்ற போட்டியில் பும்ரா பாய் தொடர்ந்து டாட் பந்துகளை வீசி தென் ஆப்பிரிக்காவுக்கு அழுத்தம் கொடு என்று என்னிடம் சொன்னார். அது போல் நான் பந்து வீசியது அணிக்கு நலனை கொடுத்தது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து தொடரிலும் காயமடைந்துள்ள ஷமிக்கு பதிலாக முகேஷ் குமார் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement