10 – 15 நொடிகள் வெய்ட் பண்ணியே கடுப்பாகிடும்.. சோயப் அக்தர் பவுலிங்கை நேருக்கு நேராக கலாய்த்த.. விரேந்தர் சேவாக்

sehwag akhtar
- Advertisement -

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் வரலாற்றின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 90களின் இறுதியில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே தன்னுடைய அதிரடியான வேகப்பந்து வீச்சால் நட்சத்திர வீரர்களை திணறடித்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். குறிப்பாக லாரா, பாண்டிங் போன்ற மகத்தான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் நிறைய சவாலை கொடுத்த பெருமைக்குரியவர்.

அதிலும் குறிப்பாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் – சோகப் அக்தர் ஆகியோர் மோதிய போட்டிகள் எல்லாம் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளது. மேலும் ராகுல் டிராவிட், சேவாக் போன்ற இந்திய வீரர்களை கண்டால் வேண்டுமென்றே அதிகமான வேகத்தில் வீசக்கூடிய அக்தர் எதுவுமே வேலைக்காகவில்லை என்றால் பீமர் பந்துகளை வீசி காயமடைய வைத்ததாவது வெளியேற்ற வேண்டும் என்ற ஸ்டைலில் பந்து வீசியதை மறக்க முடியாது.

- Advertisement -

10 – 15 நொடிகள்:
இருப்பினும் அதற்கு சச்சின், சேவாக் போன்ற இந்திய பேட்ஸ்மேன்கள் பல தருணங்களில் தக்க பதிலடியும் கொடுத்துள்ளார்கள். முன்னதாக உலகிலேயே அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்துள்ள சோயப் அக்தர் கிட்டத்தட்ட பவுண்டரி எல்லையின் அருகே இருந்து நீண்ட முடிகளுடன் ஓடிவந்து பந்து வீசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஆனால் அப்படி அவர் நீண்ட தூரத்திலிருந்து ஓடி வந்து பந்தை வீசுவதற்குள் 10 – 15 நொடிகள் பேட்டை கையில் வைத்துக்கொண்டு காத்திருந்து கடுப்பாகி விடும் என்ற வகையில் வீரேந்திர சேவாக் கலாய்த்துள்ளார். இது பற்றி துபாயில் நடைபெறும் ஐஎல்டி20 தொடரில் சோயப் அக்தரிடம் அவர் நேரடியாக பேசியது பின்வருமாறு. “நான் கையில் பேட்டை வைத்துக் கொண்டு அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். ஏனெனில் அவர் தன்னுடைய ஓட்டத்தை முடிப்பதற்கு 10 – 15 நொடிகள் எடுத்துக் கொள்வார் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினார்.

- Advertisement -

அப்போது குறுக்கிட்ட சோயப் அக்தர் அவ்வாறு நான் ஓடி வருவது உங்களுடைய கவனத்தை சீர்குலைக்குமா? என்று கேட்டார். அதற்கு சேவாக் பதிலளித்தது பின்வருமாறு. “நீங்கள் ஓடி வரும் போது என்னுடைய மனதில் நிறைய எண்ணங்கள் ஓடும். குறிப்பாக இவர் நம்முடைய கால்களை அடிப்பாரா அல்லது பீமர் பந்துகளால் தலையை தாக்குவாரா அல்லது உடம்பில் அடிப்பாரா என்பது போல நினைப்பேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: எல்லாருக்கும் அது சமம் தானே.. இந்தியாவில் சாக்கு சொல்லும் கலாச்சாரத்தை நிறுத்துங்க.. நாசர் ஹுசைன்

இந்த விவாதத்தை சோயப் அக்தர் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது பின்வருமாறு. “எங்களின் அன்பான வீரு பாய் நான் நீண்ட தூரம் ஓடி வருவதால் நேரம் காத்திருப்பதை பற்றி பேசினார். மேலும் நான் நீண்ட தூரம் ஓடுவது கவனத்தை சீர்குலைப்பதாக இருப்பதாகவும் அவர் கருதுகிறார்” என்று கூறினார்.

Advertisement