நான் கடைசி ஓவர் போட வந்தபோது தோனி என்கிட்ட வந்து சொன்ன விஷயம் இதுமட்டும்தான் – முகேஷ் சவுத்ரி பேட்டி

Mukesh
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 9-வது லீக் போட்டியில் நேற்று ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. அதில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றிருந்த ரவீந்திர ஜடேஜா கேப்டன்ஷிப் அழுத்தம் காரணமாக அந்த பதவியை மீண்டும் 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என பெயரெடுத்த தோனியிடமே வழங்கினார். அதைத்தொடர்ந்து சென்னையின் கேப்டனாக மீண்டும் தோனி வந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 202/2 ரன்கள் சேர்த்தது.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH 2.jpeg

- Advertisement -

அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கி பட்டையை கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்திய ருதுராஜ் கைக்கவாட் – டேவோன் கான்வே ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஐபிஎல் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த சென்னை ஜோடியாக சாதனை படைத்தனர். அதில் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 99 (57) ரன்கள் எடுத்த ருதுராஜ் துரதிஷ்டவசமாக அவுட்டான போதும் மறுபுறம் அவருக்கு ஈடாக அதிரடி காட்டிய டேவோன் கான்வே 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 85* (55) ரன்கள் எடுத்து சூப்பரான பினிஷிங் கொடுத்தார்.

மிரட்டிய முகேஷ்:
அதை தொடர்ந்து 203 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நல்ல தொடக்கம் கொடுத்தனர். அப்போது 6-வது ஓவரை வீசிய இளம் பவுலர் முகேஷ் சவுத்ரி 39 (24) ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மாவை அவுட் செய்து அடுத்து வந்த ராகுல் திரிபாதியை கோல்டன் டக் அவுட் செய்து போட்டியை சென்னையின் பக்கம் திருப்பினார். அந்த நிலைமையில் அடுத்து வந்த ஐடன் மார்க்ரம் 17 (10) ரன்களில் அவுட்டாக கேப்டன் வில்லியம்சனும் 47 (37) அவுட்டானதால் ஹைதராபாத் பின்னடைவை சந்தித்தது.

Mukesh Chowthry CSK

அப்போது வந்த ஷஷாங்க் சிங் 15 (14) வாசிங்டன் சுந்தர் 2 (2) என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய முக்கிய சவுதரி மீண்டும் போட்டியை சென்னையின் பக்கம் திருப்பினார். இறுதியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக சிக்சர்களை பறக்க விட்டு சென்னைக்கு அச்சுறுத்தலை கொடுத்தபோது கடைசி ஓவரில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மீண்டும் முகேஷ் சவுத்ரியிடம் அந்த ஓவரை கேப்டன் தோனி நம்பி வழங்கினார். அதில் அவர் 6, 4, 0, 1 ஒய்ட், 6, 6, 1 என தாறுமாறாக பந்துவீசி ரன்களை வாரி வழங்கிய போதிலும் பூரன் 64* (33) ரன்களை விளாசிய போதிலும் தப்பிய சென்னை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

நோ பால் வேண்டாம்:
இதனால் பங்கேற்ற 9 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது. முன்னதாக இந்த போட்டியில் நட்சத்திர பவுலர் டுவைன் பிராவோ இல்லாத நிலையில் கடைசி ஓவரில் பந்தை கொடுப்பதற்கு முன் நோ – பால் மட்டும் வீசி விட வேண்டாம் என்று தோனி கூறியதாக 4 விக்கெட்டுக்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய முக்கிய சவுத்ரி தெரிவித்தார். இதுபற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் என்னிடம் சாதாரணமாக பந்துவீசு என்று கூறினார். இருப்பினும் நான் ஒருசில வித்தியாசமான பந்துகளை முயற்சித்தேன். அதன்பின் மீண்டும் நிறைய ரன்கள் இருப்பதால் சாதாரணமாக பந்துவீசு அது போதும் நோ பால் மட்டும் வீசி விடாதே என தோனி தெரிவித்தார்” என்று கூறினார்.

Mukesh

இது மட்டுமல்லாமல் சமீப காலங்களாகவே நிறைய பவுலர்கள் ஒரே ஓவரில் 20 – 30 ரன்களை கொடுத்து வெற்றியை பறித்து விடுகிறார்கள். அதுபோன்ற சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டுமென்ற சிம்பிளான கேப்டன்ஷிப் யுக்தியை நேற்றைய போட்டி முடிந்த பின் எம்எஸ் தோனி தெரிவித்தது பின்வருமாறு. “நீங்கள் 200 ரன்களை அடித்து விட்டால் எப்படியும் 19 ஓவர்களில் 175 – 180 ரன்களை எதிரணியினர் அடிப்பார்கள். எனவே பவுலர்கள் எப்போதும் ஏதேனும் புதிதாக முயற்சிக்கு வேண்டியுள்ளது”

- Advertisement -

“அந்த வகையில் எனது பந்துவீச்சாளர்களுக்கு எப்போதும் உங்களது ஒரு ஓவரில் ஒரு பேட்ஸ்மேன் 4 சிக்சர் அடித்தால் எஞ்சிய 2 பந்துகளை வைத்து நீங்கள் ஏதாவது செய்யுங்கள் என்று நான் கூறுவேன். அந்த சிறப்பான 2 பந்துகள் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தர வல்லது. ஏனெனில் நிறைய பவுலர்கள் ஒரு ஓவரில் 3 – 4 சிக்சர்களை கொடுத்துவிட்டால் அத்தோடு கதை முடிந்தது என்று மனமுடைந்து விடுவார்கள். ஆனால் எஞ்சிய 2 பந்துகளில் அந்த பவுலர் சிக்ஸர்களை கொடுக்காமல் பவுண்டரி கொடுத்தால்கூட போட்டியில் வெற்றி பெற நிறைய வாய்ப்புள்ளது. இந்த கூற்றை மற்றவர்கள் நம்புவார்களா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு இதுதான் வேலை செய்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க : எனக்காக அந்த பர்மிஷன் கொடுத்த டீம் மேனேஜ்மென்ட்க்கு ரொம்ப நன்றி – புது மாப்பிள்ளை டேவான் கான்வே

அதாவது பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நவீன டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 4 சிக்ஸர்களை பேட்ஸ்மேன்கள் அடிக்க தான் செய்வார்கள் எனக்கூறும் தோனி அதற்காக பின்வாங்காமல் எஞ்சிய 2 பந்துகளில் ஏதேனும் மாற்றங்களை செய்து சிறப்பாக பந்துவீசினால் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும் என்று தெரிவித்தார். இதை பெரும்பாலான கேப்டன்கள் நம்பக்கூட மாட்டார்கள் என தெரிவித்துள்ள அவர் இதைதான் காலம் காலமாக பின்பற்றுவதாக தனது சிம்பிளான கேப்டன்சிப் பிளான் பற்றி தெரிவித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

Advertisement