கிரிக்கெட் தான் என் மொழி.! இந்த 3 சுழற்பந்து வீச்சாளர்களை பார்த்து நான் பௌலிங் கத்துக்கிட்டேன்..

mujeeb-ur-rahaman
- Advertisement -

கிரிக்கெட் உலகில் கடைக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணி, மற்ற நாட்டு கிரிக்கெட் அணிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே அந்த அணியில் இருக்கும் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்கள் தான். அந்த அணியில் இருக்கும் இளம் வீரரான முஜீப் உர் ரஹ்மான், கிரிக்கெட் தான் தனது மொழி என்று மனம் திறந்து கூறியுள்ளார்.

Mujeeb Ur Rahman

- Advertisement -

சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இதன் மூலம் புதிய உத்வேகம் கொண்டுள்ள இந்த அணியில் இளம் வீரரான ரஷீத் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.

17 வயதாகும் முஜீப் உர் ரஹ்மான் இதுவரை 15 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடிய இவர் 11 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்களை வீழ்ந்தி அசத்தினார்.

Mujeeb Ur Rahman

சமீபத்தில் தனது பந்து வீச்சு குறித்து பேசிய முஜீப் உர் ரஹ்மான் “நான் சிறுவயதில் என்னுடைய மாமாவிற்கு பந்து வீசுவேன். அப்போது பந்து வீசும் போது நான் ஏற்கனவே சர்வேதேச அணியில் இடம்பிடித்து விட்டேன் என்ற மனநிலையில் தான் பந்து வீசுவேன். தொடக்கத்திலிருந்தே சர்வதேச வீரர்களுக்கு பந்துவீசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது

என்னை பொறுத்த வரை மொழி முக்கியம் இல்லை, என்னுடைய கிரிக்கெட் தான் எனது மொழி. கிரிக்கெட் சம்பந்தமாக என்ன கூறினாலும் அது எனக்கு புரிகிறது. நான் சர்வதேச பந்துவீச்சாளர்களான அஸ்வின், சுனில் நரைன், மெண்டிஸ் ஆகியோர்களின் பந்துவீச்சை விடீயோக்களில் பார்த்து தான் வளர்ந்தேன் ” என்று கூறியுள்ளார்.

Advertisement