கடந்த பல ஆண்டுகளாக ரெய்னாவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட இதுவே காரணம் – எம்.எஸ்.கே பிரசாத் ஓபன் டாக்

Prasad
- Advertisement -

கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகள், 78 டி20 போட்டிகள் மற்றும் 18 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அவர் விளையாடிய காலத்தில் இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்பட்ட ரெய்னா பின்வரிசையில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவது மட்டுமின்றி தனது அபாரமான பீல்டிங்கின் மூலம் இந்திய அணிக்கு உதவியுள்ளார். அதுமட்டுமின்றி பகுதிநேர பந்துவீச்சாளராகவும் ரெய்னா இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Raina

- Advertisement -

இந்திய அணிக்காக இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் ரெய்னா இனி இந்திய அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை டி20 அணியில் தான் விளையாட தயாராக இருப்பதாக ஏற்கனவே தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் முடிந்து ரெய்னா தனது மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நெதர்லாந்தில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதன்பிறகு தனது கடுமையான பயிற்சிக்கு பிறகு மீண்டும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது அணிக்காக சிறப்பாக விளையாட காத்திருந்த ரெய்னா இந்த ஆண்டு கொரோனா வைரஸால் விளையாட முடியாததால் சற்று வருத்தத்தில் இருக்கிறார்.

Raina

இந்நிலையில் தற்போது இந்திய அணியில் இருந்து ரெய்னா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்ததற்கான காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தனது கருத்தினை அளித்துள்ளார். அவர் ரெய்னா தேர்வு குறித்து கூறுகையில் : கடந்த 1999ஆம் ஆண்டு டெஸ்ட் அணியிலிருந்து விவெஸ் லட்சுமணன் தனது இடத்தை மோசமான ஆட்டம் காரணமாக பறிகொடுத்தார்.

- Advertisement -

ஆனால் அதன்பின்னர் மனம்தளராமல் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆயிரத்து 1400 ரன்கள் குவித்து மீண்டும் தன்னை நிரூபித்து மீண்டும் இடம்பிடித்து விளையாடினார். அதனைப் போன்று வீரர்கள் புறக்கணிக்கப்படும்போது மீண்டு வர வேண்டும். இதைத்தான் சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்படும் போது அவர்களிடமிருந்து தேர்வுக்குழு எதிர்பார்க்கும் என்று எம்எஸ்கே பிரசாத் கூறினார்.

Raina

ரெய்னா கடந்து 2018 – 19 ஆம் ஆண்டு ரஞ்சித் தொடரில் 2 அரைசதம் உட்பட 243 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் 17 போட்டிகளில் 383 ரன்கள் மட்டுமே அவர் குவித்துள்ளார். இது குறித்து பேசிய பிரசாத் கூறுகையில் : அணியில் எதிர்பாராதவிதமாக ரெய்னா விஷயத்தில் இது போல நடக்கவில்லை. அவரின் பார்ம் அவரது தேர்விற்கு முக்கிய விடயமாக இருந்தது.

Raina

அதே நேரத்தில் மற்ற வீரர்கள் உள்ளூர் மற்றும் இந்திய ஏ அணி போட்டிகளில் அசத்தி பெரிய வீரராக உருவெடுத்த காரணத்தினால் ரெய்னா விடயத்தில் அவற்றினை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே ரெய்னா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement