ரிஷப் பண்ட் அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க இவரும் ஒரு ஒரு மறைமுக காரணம் – தேர்வுக்குழு தலைவர் பேட்டி

Prasad
- Advertisement -

இந்திய அணியில் தோனிக்கு பிறகு இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் முதன்மை விக்கெட் கீப்பராக தெரிவுசெய்யப்பட்டார். உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இருந்து தற்காலிக ஓய்வு இருந்த தோனி மீண்டும் அணிக்கு திரும்பும் நேரத்தில் அவருக்கு இந்திய நிர்வாகம் வாய்ப்பினை மறுத்தது. மேலும் அவருக்கு பதிலாக ரிஷப் பண்டிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.

Pant 1

- Advertisement -

ஆனால் தனக்கு அளிக்கப்பட்ட அத்தனை வாய்ப்புகளையும் சரிவர அவர் உபயோகிக்கவில்லை மேலும் தொடர்ச்சியான சொதப்பலான ஆட்டம் காரணமாக தற்போது அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள பண்டிற்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் பண்ட் மீது இந்திய நிர்வாகம் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளது.

அதன் காரணமாகவே அவர் அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார். இந்நிலையில் டோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவரான எம்எஸ்கே பிரசாத் தனது கருத்தினை அளித்தது அளித்துள்ளார். அதில் டோனி தானாக முன்வந்து சிலகாலம் ஓய்வினை கேட்டுக்கொண்ட காரணத்தினாலேயே ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்தார்.

dhoni with pant

இதில் முழுக்க முழுக்க தோனியின் ஒப்புதலோடு அவருக்கு அந்த ஓய்வு தரப்பட்டது, அதன் காரணமாகவே ரிஷப் பண்ட் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி வந்தார். எனவே ரிஷப் பண்ட் அணியில் விளையாடுவதற்கு ஒரு காரணம் தோனி என்று நான் கூறுவேன். இருப்பினும் தற்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப நினைத்த தோனியை அணி நிர்வாகம் மறுத்து வருகிறது.

- Advertisement -

உங்களைப் போலவே நானும் தோனி மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க ஆவலாக உள்ளேன். ஆனால் தற்போதைக்கு தோணியை விட்டு அணி நிர்வாகம் சற்று நகர்ந்து உள்ளது என்றே தோன்றுகிறது. இதற்கு ஒரு வகையில் காரணம் தோனிதான் அவர் தொடர்ந்து அணியில் இடம் பிடித்து இருந்தால் இதுபோன்ற சூழல் அவருக்கு ஏற்பட்டிருக்காது.

Rishab Pant

அவர் மீண்டும் விளையாடும் நாளை தான் எதிர்பார்த்து வருவாதாக பிரசாத் கூறியது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக அணியில் இடம்கிடைக்காமல் தவித்து வரும் தோனி ஐ.பி.எல் தொடரில் தனது திறமையை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க நினைத்தார். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அவரின் அந்த ஆசையும் தற்போது தள்ளிப்போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement