இந்திய அணியில் தமிழக வீரரான இவருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பளித்திருக்கலாம் – எம்.எஸ்.கே பிரசாத்

Prasad
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 30 வயதிற்கு மேலான ஒரு வீரர், உள்ளூர் தொடர்களில் எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களை சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யக்கூடாது என்ற எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. இதனை கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை இந்திய தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத் கடுமையாக கடைபிடித்து வந்தார். அவருடைய பதவிக்காலத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்த அவர், யுவராஜ் சிங், மஹேந்திர சிங் தோணி போன்ற மூத்த வீரர்களை இந்திய அணியில் இருந்தும் நீக்கினார்.

Prasad

- Advertisement -

அவருடைய இந்த செயல்பாடுகள் பெரும் விமர்ச்சனத்திற்கு உள்ளானபோது, எதிர்கால இந்திய அணியை இளம் வீரர்கள் கொண்டுதான் கட்டமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். ஆனால் அவரே தற்போது 30 வயதிற்கு மேலாகிவிட்ட தமிழக வீரர் ஒருவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கி இருக்கலாம் என்று கூறியிருப்பது அனைவரின் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து தனியார் இணையதளம் ஒன்றிர்கு அவரளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் தமிழக வீரரான அபினவ் முகுந்திற்காக அதிகமாக வருத்தப்படுகிறேன். திறைமையான அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இன்னும் அதிகமான வாய்ப்புகள் வழங்கி இருக்கலாம். அவருக்கு வாய்ப்பு வழங்காமல் விட்டது, ஒவ்வொரு இரவின்போதும் உங்களை தூங்க விடாமல் செய்யும். என்னுடைய பதிவிக்காலத்திலும் அவருக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.

abhinav mukund

ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை. இந்தியா A மற்றும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி இருக்கும் அவர் மட்டும், இந்த செயல்முறைக்கு விதிவிலக்கானவர் என்று எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். 31 வயதான அபினவ் முகுந்த் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார். அளிக்கப்பட்ட வாய்ப்புகளில் எல்லாம் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர், அதற்குப் பிறகு உள்ளூர் தொடரான ரஞ்சி ட்ராபி போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

mukund

இருந்தபோதிலும் இளம் வீரர்களின் வருகை, இந்திய அணியில் அவர் தேர்வாவதற்கு தடையாக இருந்தது. தற்போதும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் அபினவ், 141 போட்டிகளில் 9789 ரன்களை குவித்துள்ளார். உள்ளூர் தொடர்களில் 29 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் அடித்திருக்கும் அவரின் சராசரி 47ஆக இருக்கிறது. இதுவரை இந்திய அணிக்காக ஏழு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், 23 என்ற அவரேஜில் 320 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement