2019இல் சண்டை போட்ட கம்பீருடன் லக்னோ அணியில் புதிய பயிற்சியாளராக இணைந்த எம்எஸ்கே பிரசாத் – விவரம் இதோ

MSK Prasad Gautam Gambhir
- Advertisement -

கோடைகாலத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று சாதனை படைத்த நிலையில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மீண்டும் பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. கடந்த வருடம் முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்டு கேஎல் ராகுல் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்று வரை வந்த அந்த அணி இம்முறை எலிமினேட்டர் வரை வந்து தோல்வியை சந்தித்து வெளியேறியது.

Gambhir

- Advertisement -

இதைத்தொடர்ந்து அடுத்த வருடம் கோப்பையை வெல்வதற்கு தயாராகும் அந்த அணி நிர்வாகம் பயிற்சியாளராக இருந்த ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டி ஃபிளவரை கழற்றி விட்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜஸ்டின் லாங்கரை புதிய தலைமைப் பயிற்சியாளராக அறிவித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து தங்களின் ஸ்டேட்டர்ஜிக் ஆலோசகராக செயல்படுவார் என்று லக்னோ அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சண்டையிட்ட கம்பீர்:
அதாவது எந்த வகையான வீரர்களை தேர்வு செய்து எப்படி அணியை உருவாக்குவது நுணுக்கங்கள் அடிப்படையில் அவர்களுக்கு எப்படி உதவுவது போன்ற அம்சங்களில் உதவுவதற்காக எம்எஸ்கே பிரசாத் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து ஏற்கனவே ஆலோசகராக இருக்கும் கௌதம் கம்பீர் போன்ற இதர பயிற்சியாளர்களுடன் இணைந்து அவர் லக்னோவின் வெற்றிகளுக்காக பாடுபட உள்ளார். முன்னதாக ஒரு வீரராக ரசிகர்களிடம் பிரபலமில்லாத அளவுக்கு சுமாராகவே செயல்பட்ட பிரசாத் தேர்வுக்குழு தலைவராக அனைவரது மனதிலும் சர்ச்சைக்குரிய முறையில் இடம் பிடித்துள்ளார் என்றே சொல்லலாம்.

ஏனெனில் 2019 உலகக்கோப்பையில் நம்பர் 4வது இடத்தில் விளையாடுவதற்கு தகுதியாக இருந்த ராயுடுவை கடைசி நேரத்தில் முப்பரிமாண வீரர் தேவை என்ற கருத்துடன் கழற்றி விட்ட அவர் தமிழகத்தின் விஜய் சங்கரை தேர்வு செய்தது 4 வருடங்கள் கழித்து இன்று வரை இந்தியாவுக்கு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. அதை அந்த சமயத்தில் வர்ணனையாளராக இருந்த கௌதம் கம்பீர் கடைசி நேரத்தில் எப்படி நீங்கள் ராயுடுவை கழற்றி விடலாம்? என்று நேரடியாகவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் விமர்சித்து எம்எஸ்கே பிரசாத்தை வெளுத்து வாங்கினார். அந்த சமயத்தில் பெரிய பரபரப்பு ஏற்படும் அளவுக்கு அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“2019 உலகக்கோப்பையில் விஜய் சங்கர் அல்லது வேறு யார் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் சில முடிவுகள் நம்ப முடியாததாக இருக்கிறது. ஏனெனில் அம்பத்தி ராயுடுவை நீங்கள் தேர்வு செய்யவில்லை. அவர்களால் நம்பர் 4 பேட்ஸ்மேனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் ஒரு இடத்தை கண்டறிய வேண்டிய நிலைமையில் இருந்தும் அதை செய்யவில்லை. மேலும் ராயுடுவை நீங்கள் 4வது இடத்தில் விளையாடுவதற்காக 2 வருடங்கள் வாய்ப்பு கொடுத்து வளர்த்தீர்கள்”

“ஆனால் கடைசி நேரத்தில் 3டி பிளேயர் வேண்டும் என்று சொல்கிறீர்கள். இது தான் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புடன் சொல்லும் கருத்தா” என்று வெளிப்படையாக விமர்சித்தார். அதை தாங்கிக் கொள்ள முடியாத எம்எஸ்கே பிரசாத் உலகக்கோப்பையில் விஜய் சங்கரை தேர்வு செய்ததற்கான காரணத்தை விளக்கியது பின்வருமாறு. “இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நம்முடைய டாப் ஆர்டரில் அனைவரும் பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர். ரோகித் சர்மா, ஷிகர் தவான் அல்லது விராட் கோலி போன்ற யாருமே அங்கு பந்து வீசுபவராக இல்லை”

இதையும் படிங்க:IND vs IRE : அது உங்களோட பிரச்சனை, ட்ராவிட் – ரோஹித் கவலை குறித்து – கம்பேக் கொடுக்கும் பும்ரா மாஸ் பேட்டி

“எனவே அங்கே விஜய் சங்கர் போன்ற ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து சூழ்நிலைகளில் பந்து வீச முடியும் என்று நம்பி தேர்வு செய்தோம்” என்று கூறினார். அப்படி 4 வருடங்களுக்கு முன்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட கௌதம் கம்பீர் மற்றும் எம்எஸ்கே பிரசாத் ஆகியோர் தற்போது ஒரே அணியில் பயிற்சியளராக செயல்பட உள்ளது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைக்கிறது. மேலும் லக்னோ அணியில் இனிமேல் அதிக 3டி பிளேயர்களை பார்க்க முடியும் என்று ரசிகர்கள் பிரசாத்தை கலாய்கின்றனர்.

Advertisement