சென்னையின் செல்லப்பிள்ளையான தல தோனி சேப்பாக்கத்தில் செய்துள்ள 5 தரமான சம்பவங்கள் – விவரம் இதோ

MS Dhoni
- Advertisement -

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரில் கடந்த 1981-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி பிறந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இன்று தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளான இன்று உலகெங்கிலும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2020-ஆம் ஆண்டே ஓய்வு பெற்றாலும் இன்றளவும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக திகழ்ந்து வரும் இவர் குறித்து செய்திகள் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தோனிக்கு ஆதரவு இருந்து வருகிறது.

Kohli dhoni

- Advertisement -

ஜார்கண்டில் பிறந்து இந்திய அணிக்கு தலைமை தாங்கி மூன்று வகையான ஐ.சி.சி கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ள ஒரே கேப்டனான தல தோனி கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இப்படி வெற்றிகராமான திகழும் சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி தமிழகத்தின் செல்லப் பிள்ளையாகவே மாறியுள்ளார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் தமிழக ரசிகர்களுக்கும் தோனிக்கும் இடையேயான பிணைப்பு என்பது அந்த அளவிற்கு வலுவானது.

தோனி கூட பலமுறை ராஞ்சிக்கு அடுத்து சென்னை தான் எனக்கு இரண்டாவது வீடு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது 42 வயதை எட்டியிருக்கும் தோனி கடைசியாக நான் விளையாடும் ஐ.பி.எல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் இருக்கும் என்றும் சென்னை ரசிகர்கள் மத்தியில் தான் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று ஏற்கனவே அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கும், தோனிக்கும் இடையேயான பிணைப்பு உறுதியாக இருக்கும் இவ்வேளையில் சென்னை சேப்பாக்கத்தில் தோனி செய்துள்ள ஐந்து தரமான சம்பவங்களை இங்கு காணலாம்.

Dhoni

1) டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் : இந்திய அணிக்காக கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 6 சதம் மற்றும் 33 அரைசதங்களுடன் 4876 ரன்கள் குவித்துள்ளார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த தனிப்பட்ட அதிகபட்ச ரன்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வந்ததாகும். கடந்த 2012-13-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நடைப்பெற்ற டெஸ்ட் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் தான் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரான 224 ரன்களை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2) சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக 44 வெற்றிகள் : சென்னை அணியின் கேப்டனாக 2008-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் தோனி இதுவரை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் அதிகபட்சமாக கேப்டனாக 44 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார்.

MS Dhoni vs MI

3) சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 37 பந்துகளில் 67 ரன்கள் குவித்தது : கடந்த 2013 ஆம் ஆண்டு சி.எஸ்.கே மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போது சாத்தியமே இல்லாத ஒரு பெரிய இலக்கினை துரத்திய வேளையில் தோனி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை அழைத்துச் சென்றார்.

- Advertisement -

4) 2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை வென்றது : சென்னை அணி ஐபிஎல் வரலாற்றில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து வந்தாலும் சூதாட்டம் குற்றச்சாட்டு காரணமாக ஓரிரு ஆண்டுகள் தடை பட்டிருந்தது. அப்படி தடைசெய்யப்பட்ட பிறகு மீண்டும் 2018-ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்த போது தோனியின் தலைமையிலான சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் தான் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதையும் படிங்க : புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய மகத்தான தோனி – விக்கெட் கீப்பராக படைத்துள்ள 5 உலக சாதனைகள் இதோ

5 சேப்பாக்கம் மைதானத்தில் 1400-க்கும் மேற்பட்ட ஐபிஎல் ரன்கள் : பொதுவாகவே ஐபிஎல் போட்டிகளில் டாப் ஆர்டர் அல்லது மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரர்களே அதிக ரன்கள் அடித்த வீரர்களாக இருப்பார். ஆனால் சென்னை அணியை பொருத்தவரை பின்வரிசையில் களமிறங்கினாலும் தனக்கு கிடைக்கும் பந்துகளில் எல்லாம் ரன்களை குவித்து அசத்தும் தோனி சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் இதுவரை 61 போட்டிகளில் 1444 ரன்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement