IPL 2023 : அவரு நம்ம டீமுக்கு ரொம்ப முக்கியம். அவரை வாங்கியே ஆகனும் – ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட தோனி

MS-Dhoni-and-Auction
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது எதிர்வரும் 2023-ஆம் ஆண்டில் 16 வது சீசனாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ள வேளையில் இந்த தொடருக்கு முன்னதாக மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து கழட்டிவிட்ட வீரர்களின் பட்டியலை ஏற்கனவே அறிவித்து விட்டன. அதனை தொடர்ந்து வரும் 23-ஆம் தேதி கொச்சியில் ஐபிஎல் தொடரின் மினி ஏலம் நடைபெற இருக்கிறது.

IPL 2022 (2)

- Advertisement -

இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை மற்ற அணிகளுடன் போட்டியிட்டு ஏலத்தில் எடுக்கும். அந்த வகையில் ஏற்கனவே அனைத்து அணிகளும் தங்களது அணியில் உள்ள கழட்டிவிட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்ட வேளையில் சென்னை அணியும் தங்களது அணியில் இருந்து கழட்டிவிட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தது. அதில் முக்கியமாக ஓய்வு பெற்ற ராபின் உத்தப்பா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் டுவைன் பிராவோ ஆகியோரை சி.எஸ்.கே விடுவித்தது.

சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேறிய பிராவோ ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்று சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பொறுப்பேற்றார். இந்நிலையில் பிராவோவின் இடத்திற்கு தேர்வாகப்போகும் அந்த வீரர் யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு தான் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

Sam-Curran-CSK

அந்த வகையில் நடைபெறவுள்ள மினி ஏலத்தில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி வேகமாக பந்துவீசும் ஒரு ஆல்ரவுண்டர் நமக்குத் தேவை என்பதால் சாம் கரணை கண்டிப்பாக ஏலத்தில் எடுத்தாக வேண்டும் என்று சிஎஸ்கே அணிக்கு கட்டளையிட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் சாம் கரணால் டெத் ஓவரில் பந்து வீசமுடியும். அதோடு பின் வரிசையில் அதிரடியாக பேட்டிங் செய்யவும் முடியும் என்பதனால் தோனி இந்த முடிவை எடுத்து உள்ளாராம்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி ஏற்கனவே சென்னை அணியில் சாம் கரனை வைத்து தோனி விதவிதமாக பயன்படுத்தி வந்ததால் அவரின் மீது எப்போதுமே தோனிக்கு ஒரு நம்பிக்கை உள்ளது என்கிற காரணத்தினாலும் தோனி நிச்சயம் சாம் கரணை ஏலத்தில் எடுத்தாக வேண்டும் என்று அணி நிர்வாகத்திடம் கூறியதாக தெரிகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 ஏலம் : விலை போக மாட்டார்கள் என்று கருதப்படும் 5 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்களின் பட்டியல் இதோ

ஏற்கனவே 2020 முதல் 21 சீசனில் சென்னை அணிக்காக விளையாடிய சாம் கரன் 23 போட்டிகளில் சென்னை அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். அதோடு சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருதினையும் வென்றதால் இவரின் மீது அனைத்து அணிகளின் பார்வையும் இருக்கிறது. இருந்தாலும் தோனி அவரை விடாமல் சிஎஸ்கே அணிக்கு எடுக்குமாறு ஸ்ட்ரிக் ஆர்டர் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement