ஐபிஎல் 2023 ஏலம் : விலை போக மாட்டார்கள் என்று கருதப்படும் 5 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்களின் பட்டியல் இதோ

Root
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலத்தில் இந்தியாவிலேயே நடைபெறுகிறது. அதற்காக வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெறும் ஏலத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 405 கிரிக்கெட் வீரர்கள் களமிறங்குகிறார்கள். பொதுவாகவே டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதே வெற்றியின் ரகசியமாக பார்க்கப்படும் நிலையில் அதற்கு தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் துடிதுடிப்பான இளம் வீரர்கள் அவசியமானவர்கள்.

IPL 2022 (2)

மேலும் அனுபவமே ஆசான் என்ற வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு பெற்ற அனுபவத்தை வைத்து டி20 கிரிக்கெட்டில் சில வீரர்கள் அசத்தினாலும் பெரும்பாலானவர்கள் சுமாராக செயல்படுவது வழக்கமாகும். அதனாலயே அது போன்ற வீரர்களுக்கு மவுசு குறைவாக இருப்பதுடன் பெரும்பாலான அணிகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டாது. அந்த வகையில் இந்த ஏலத்தில் விலை போக மாட்டார்கள் என்று சொல்லக்கூடிய சில சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. டேவிட் வீஸ்: தென் ஆப்பிரிக்காவில் பிறந்து தற்போது நமீபியா அணிக்காக விளையாடும் இவர் 37 வயதை மிஞ்சிய நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். 3600+ ரன்களையும் 250 விக்கெட்டுகளையும் எடுத்துள்ள அவர் தற்போது இலங்கையில் நடைபெறும் எபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

Wiese

இருப்பினும் துடிதுடிப்புடன் செயல்படக்கூடிய இளம் வீரர்களை வாங்குவதற்கு விரும்பும் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் அனுபவத்தைக் கொண்டிருந்தாலும் 37 வயதை கடந்த இவரை வாங்க ஆர்வம் காட்டாது. அத்துடன் இதற்கு முன் இந்திய ஆடுகளங்களில் இவர் அசத்திய வரலாறும் இல்லை.

- Advertisement -

4. வேன் டெர் டுஷன்: 41 டி20 போட்டிகளில் 1043 ரன்களை எடுத்துள்ள இவர் தென்னாப்பிரிக்க அணியில் முதன்மை பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தாலும் இந்தியா ஆடுகளங்களில் தடுமாற்றமான செயல்பாடுகளையே வெளிப்படுத்தி வருகிறார்.

vanderdussen

குறிப்பாக இந்த வருட ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடிய அவர் 22 ரன்களை மட்டுமே எடுத்து 2022 டி20 உலக கோப்பையிலும் சுமாராகவே செயல்பட்டார். அதன் காரணமாக இவரையும் பெரும்பாலான அணி நிர்வாகங்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

3. டாம் லாதம்: நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக போற்றப்பட்டாலும் டி20 கிரிக்கெட்டில் சுமாராகவே செயல்பட்டுள்ளார்.

அதனாலேயே கடந்த 2021க்குப்பின் நியூசிலாந்துக்காக டி20 கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை இழந்து நிற்கும் அவரிடம் நல்ல அனுபவம் இருந்தாலும் எந்த அணியும் வாங்காது என்று உறுதியாக சொல்லலாம்.

- Advertisement -

2. ஜோ ரூட்: இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் தரமான வீரர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் உச்சத்தில் இருந்த போது ஐபிஎல் தொடரை புறக்கணித்து நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை போல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் எப்போதும் சிறப்பாக செயல்படாத இவர் முதல் முறையாக இந்த ஐபிஎல் ஏலத்தில் தான் தனது பெயரை கொடுத்துள்ளார்.

ஆனால் சமீப காலங்களில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பெரிய அளவில் விளையாடாத இவர் காலம் கடந்த பின் 31 வயதில் தற்போது களமிறங்குவதால் எந்த அணியும் வாங்குவதற்கு ஆர்வம் காட்டாது என்றே கூறலாம். மேலும் சராசரியாக ஒரு அணியில் 3 வெளிநாட்டு வீரர்களுக்கான இடம் மட்டுமே காலியாக இருக்கும் நிலையில் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்காத இவரை எந்த அணியும் வாங்காது என்றே சொல்லலாம்.

1. இஷாந்த் சர்மா: டெல்லியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் ஒரு கட்டத்தில் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை பவுலராக திகழ்ந்து டி20 கிரிக்கெட்டிலும் மிரட்டலாக செயல்பட்டார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் 104 போட்டிகளில் 84 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் நாளடைவில் வயது காரணமாக சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியது போலவே இந்திய டெஸ்ட் அணியில் நிலையான வாய்ப்பை பெற முடியாமல் தவிக்கிறார்.

Ishanth

இதையும் படிங்க: சாரி ரிக்கி பாண்டிங், அந்த விஷயத்தில் உங்களை விட தோனி தான் சிறந்த கேப்டன் – ப்ராட் ஹாக் வெளிப்படையாக பாராட்டு

குறிப்பாக 2021, 2022 சீசன்களில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்று சுமாராக செயல்பட்ட அவர் இம்முறை தன்னுடைய அடிப்படை விலையை 1.5 கோடியிலிருந்து 50 லட்சத்துக்கு குறைத்துள்ளார். இருப்பினும் 34 வயதை தாண்டி காலம் கடந்த இவருக்கு பதிலாக இளம் வீரர்களை வாங்குவதற்கே அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டும் என்பதால் இவர் விலை போவதற்கு வாய்ப்புகள் குறைவாகும்.

Advertisement