சாரி ரிக்கி பாண்டிங், அந்த விஷயத்தில் உங்களை விட தோனி தான் சிறந்த கேப்டன் – ப்ராட் ஹாக் வெளிப்படையாக பாராட்டு

MS Dhoni Ricky Ponting Brad Hogg
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 90களில் எழுச்சியடைந்த ஆஸ்திரேலியா ஸ்டீவ் வாக் தலைமையில் 1999 உலகக் கோப்பை வென்று எதிரணிகளை மிரட்டும் அணியாக அசத்தியது. அவருக்குப்பின் பொறுப்பேற்ற ரிக்கி பாண்டிங் அவரையும் மிஞ்சும் வகையில் ஆஸ்திரேலியாவை ஆக்ரோஷமான பாதையில் வழி நடத்தி 2007, 2011 ஆகிய அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியாவை உலகின் நம்பர் ஒன் அணியாக வெற்றி நடை போட வைத்த அவர் வரலாறு கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அவரது தலைமையில் ஆஸ்திரேலியா வீர நடை போட்ட போது இப்படி ஒரு கேப்டன் தங்களுக்கு கிடைக்க மாட்டாரா என்பதே இந்திய ரசிகர்களின் ஏக்கமாக இருந்தது.

Ponting-1

- Advertisement -

அதற்கு கடவுள் படைத்த மனிதரைப் போல அதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் அனுபவமில்லாத எம்எஸ் தோனி 2007இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையில் இளம் வீரர்களை மிகச் சிறப்பாக வழி நடத்தி முக்கிய நேரங்களில் தைரியமான முடிவெடுத்து இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அந்த எதிர்பாராத வெற்றி அதே 2007இல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உலகக்கோப்பைக்கு தோல்விக்கு அருமருந்தாக இந்திய ரசிகர்களுக்கு அமைந்தது.

மகத்தான தோனி:
அத்துடன் சச்சின் முதல் லக்ஷ்மன் வரை அனைத்து மூத்த வீரர்களையும் அற்புதமாக வழி நடத்திய அவர் 2010இல் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியாக தரம் உயர்த்தி 2011இல் சௌரவ் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று இந்திய ரசிகர்களின் மற்றுமொரு தாகத்தை தணித்தார். அதை விட 2013இல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா உள்ளிட்ட இளம் வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் படைக்காத சாதனையும் படைத்தார்.

Trophies Won By MS Dhoni

இந்நிலையில் களத்திற்கு வெளியே வாரியத்திலும் அணி நிர்வாகத்திலும் நடந்த அரசியல்களை ரிக்கி பாண்டிங்கை விட தோனி மிகச் சிறந்ததாக கையாண்டார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் பாராட்டியுள்ளார். அதாவது 2011 உலகக் கோப்பைக்கு பின் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குவதற்காக நிறைய சீனியர் வீரர்களை கழற்றி விட்ட தோனி அதற்காக விமர்சனங்களையும் பிசிசிஐயில் நிறைய அழுத்தங்களையும் சந்தித்தார்.

- Advertisement -

ஆனால் அதையெல்லாம் வெற்றிகரமாக கையாண்டு அடுத்த தலைமுறை வீரர்களை அவர் உருவாக்காமல் போயிருந்தால் இன்று இலங்கை போன்ற அணிகளை போல் இந்தியாவும் தடுமாறியிருக்கும். அந்த வகையில் அரசியல் மற்றும் அழுத்தங்களை சிறப்பாக கையாண்ட தோனி பெரும்பாலும் இளம் வீரர்களை வைத்து கேப்டன்ஷிப் செய்ததாக ப்ராட் ஹாக் பாராட்டியுள்ளார். மறுபுறம் ரிக்கி பாண்டிங் பெரும்பாலும் கில்கிறிஸ்ட் முதல் ஷேன் வார்னே வரை அனுபவமிக்க சாம்பியன் வீரர்களை வைத்து கேப்டன்ஷிப் செய்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

Hogg

“ரிக்கி பாண்டிங்கிடம் அற்புதமான அணி இருந்தது. தோனியும் சிறந்த அணியை பெற்றிருந்தார். என்னைப் பொறுத்த வரை இருவரும் சிறப்பாக செயல்பட்டு நல்ல கேப்டன்ஷிப் சாதனைகளை படைத்துள்ளார்கள். அவர்களை நாம் பிரிக்க முடியாது. இருப்பினும் ரிக்கி பாண்டிங்கை விட இந்திய கிரிக்கெட்டில் எம்எஸ் தோனி நிறைய அரசியல் ரீதியான நிகழ்வுகளை கொண்டிருந்தார். அது தான் ரிக்கி பாண்டிங்கை விட தோனியை முன்னிலைப்படுத்தும் அம்சமாகும். ரிக்கி பாண்டிங்கின் மற்றொரு விஷயம் என்னவென்றால் அவரைச் சுற்றி நிறைய அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்கள்”

 இதையும் படிங்க: வீடியோ : நீ பெரிய ஆளா வருவ, 13 வயதிலேயே கணித்த ஜாம்பவான் ஷேன் வார்னே – உண்மையாக்கிய ரெஹன் அஹமத்

“உண்மையில் அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் எப்படி அசத்த வேண்டும் என்பதை தெரிந்திருந்தார்கள். அதனால் விளையாட்டின் சில அம்சங்களை மட்டுமே பாண்டிங் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. அவரது தலைமையில் பெரும்பாலான வீரர்கள் அணுகுமுறைகள், ஒழுக்கம், என்ன செய்ய வேண்டும் என்ற அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் தோனி தலைமையில் அப்படி ஒரு அணியில்லை. அது கடினமான ஒன்று. அத்துடன் இந்தியாவில் இருந்த அரசியலை கையாண்ட விதத்தில் அவரை விட தோனி முன்னிலை பெறுகிறார். சாரி ரிக்கி” என்று கூறினார்.

Advertisement