பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை வென்றது. குறிப்பாக ஸ்டோக்ஸ் – மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் அதிரடியான அணுகுமுறையை பின்பற்றி பாகிஸ்தானை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கிய அந்த அணி அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த நிலையில் டிசம்பர் 17ஆம் தேதியன்று கராச்சியில் துவங்கிய சம்பிரதாய கடைசி போட்டியிலும் அசத்தலாக செயல்பட்ட இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 167 ரன்களை துரத்துகையில் 112/2 என்ற நல்ல நிலையில் உள்ளது.
அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றி உறுதியாகியுள்ளது. முன்னதாகப் இப்போட்டியில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இளம் சுழல் பந்து வீச்சாளர் ரெஹன் அகமத் 18 வருடம் 126 நாட்களில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் விளையாடும் இங்கிலாந்து வீரர் என்ற பிரைன் க்ளோஸ் அவர்களின் 73 வருட சாதனை தகர்த்த அவர் புதிய சாதனை படைத்தார்.
வார்னேவின் கணிப்பு:
இத்தனைக்கும் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக கவுண்டி தொடரில் வெறும் 3 முதல் தரம், 7 லிஸ்ட் ஏ போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் வெறும் 14 விக்கெட்டுகளையும் 195 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அந்த வகையில் குறைவான போட்டியில் மட்டுமே விளையாடி ஆரம்ப கட்டத்திலேயே இருக்கும் அவர் இவ்வளவு சீக்கிரமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அப்படி ஆச்சரியப்படும் வகையில் அறிமுகமாகியுள்ளார் என்றால் அது அவருடைய திறமையின் பரிசாகும்.
The start of something special 💫
What an achievement for @RehanAhmed__16 👏#PAKvENG pic.twitter.com/0cqO9DkbZs
— Lord's Cricket Ground (@HomeOfCricket) December 19, 2022
ஆனால் அந்த திறமையை சமீபத்தில் மறைந்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் வரலாறு கண்ட மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சாளரான ஷேன் வார்னே 5 வருடங்களுக்கு முன்பே கணித்துள்ளார். ஆம் ஒருமுறை இங்கிலாந்துக்கு பயணித்த ஷேன் வார்னே 13 வயதில் இருந்த ரெஹன் அஹமத் வலைப்பயிற்சியில் பந்து வீசுவதை நேரடியாக பார்த்துள்ளார். அவரது நுணுக்கங்களை உன்னிப்பாக கவனித்து புரிந்து கொண்ட அவர் “நீ 15 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடுவாய்” என்று அப்போதே நேரடியாக பாராட்டினார்.
அன்று அவர் கணித்தது போலவே மிக விரைவாக உள்ளூர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்தலாக செயல்பட்ட ரெஹன் அஹ்மத் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடியுள்ளார். இந்த தருணத்தில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அந்த பழைய வீடியோவில் ஷேன் வார்னே பேசியது பின்வருமாறு. “நான் உன் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருப்பேன். அநேகமாக விரைவில் நீ விளையாடும் போட்டியில் நாங்கள் வர்ணனை செய்வோம் என்று நினைக்கிறேன். குறிப்பாக உன்னுடைய 15 வயதில் நீ முதல் தர கிரிக்கெட்டில் விளையாடுவாய் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.
This old video of Shane Warne telling a 13 year old Rehan Ahmed that he'll be playing first-class cricket by 15 is really heartwarming.Shane Warne will be so proud of Rehan taking his first of many test match wickets & watching his every step❤️🏏 #PAKvENG pic.twitter.com/BhPVXNrIX9
— James (@Surreycricfan) December 17, 2022
அவரது வாக்கு போலவே 16 வயதில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அறிமுகமான ரெஹன் அஹமத் பாகிஸ்தானுக்கு எதிரான தன்னுடைய அறிமுக போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சாய்ந்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸ் (18 வருடம் 190 நாட்கள்) சாதனையை தகர்த்த அவர் (18 வருடம் 128 நாட்கள்) புதிய உலக சாதனையும் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: IND vs BAN : அடுத்த போட்டியிலும் அந்த தம்பி விளையாட மாட்டாராம் – எதுக்குப்பா அவரை சேர்த்தீங்க?
அந்த வகையில் தனது வார்த்தைகளை உண்மையாகியுள்ள அவரை பார்த்து நிச்சயமாக சொர்க்கத்திலிருந்து ஷேன் வார்னே பெருமைப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த அளவுக்கு அப்போதே துல்லியமாக கணித்த ஷேன் வார்னே இப்போது சொன்னது போல வர்ணனை செய்ய இந்த உலகத்தில் இல்லையே என்பது தான் உண்மையான ரசிகர்களின் ஆதங்கமாகவும் காணப்படுகிறது.