ஜடேஜாவை சி.எஸ்.கே அணியின் கேப்டனாக மாற்ற கைகாட்டியதே அவர்தானாம் – வெளியான தகவல்

Jadeja
- Advertisement -

ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை சிஎஸ்கே அணி விளையாடிய அனைத்து சீசன்களிலும் சென்னை அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வந்தவர் மகேந்திர சிங் தோனி. ரசிகர்களின் மத்தியில் தல என்று செல்லமாக அழைக்கப்படும் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஐசிசி கோப்பைகளை பெற்று தந்தது மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் ஆதிக்கம் மிக்க ஒரு கேப்டனாக 4 முறை சென்னை அணிக்கு அவர் கோப்பையை வாங்கி தந்துள்ளார்.

Dhoni-3

- Advertisement -

சகாப்தம் கண்ட மிகப்பெரிய கேப்டனான தோனி இன்று ரசிகர்களை அதிர வைக்கும் வகையில் திடீரென தனது கேப்டன் பதவியை துறந்துள்ளது அனைவரும் மத்தியிலும் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் தோனி திடீரென கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியது அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இன்று சிஎஸ்கே நிர்வாகம் சார்பாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் என்றும் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா இந்த தொடரில் செயல்படுவார் என்றும் அறிவித்தது.

Dhoni

மேலும் தோனி ஏன் பதவி விலகினார் என்ற காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை. இருப்பினும் சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதோடு ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆவதற்கு யார் காரணம் என்ற தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி ஏற்கனவே சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் ஜடேஜா தான் என்று பலரும் கூறிவந்த வேளையில் தோனிதான் ஜடேஜாவை கேப்டனாக மாற்றும்படி சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூறியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வரும் ஜடேஜா தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் பேட்டிங், பவுலிங் என அசத்திவருகிறார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல் – புதிய கேப்டன் அறிவிப்பு (காரணம் என்ன?)

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் கடந்த பல ஆண்டுகளாக சென்னை அணியில் ஒரு முக்கிய வீரராக செயல்பட்டு வரும் ஜடேஜா ஒரு மேட்ச் வின்னராக இருந்து வருகிறார். இப்படி அவரின் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு காரணமாகவே தோனியே ஜடேஜாவை கேப்டனாக மாற்றும்படி கை காட்டி உள்ளார் என்று கூறப்படுகிறது.

Advertisement