- Advertisement -
ஐ.பி.எல்

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் தல தோனி – சேப்பாக்கத்தில் காத்திருக்கும் சம்பவம்

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியானது நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி, சூரியகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள காத்திருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரெய்னாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் தோனி :

இந்த போட்டியில் விளையாட இருக்கும் அனுபவ வீரரும், முன்னாள் கேப்டனான எம்.எஸ் தோனி முன்னாள் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னாவின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்க காத்திருக்கிறார். அதுகுறித்த தகவல் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னா இதுவரை 171 இன்னிங்ஸ்களில் விளையாடி 4687 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 33 அரை சதங்கள் அடங்கும். சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக முதல் இடத்தில் இருக்கும் அவரை தற்போது தோனி முறியடிக்க காத்திருக்கிறார்.

அந்த வகையில் தோனி இன்னும் சுரேஷ் ரெய்னாவின் அந்த ஸ்கோரை தொட 19 ரன்கள் மட்டுமே தேவை. இதுவரை சென்னை அணிக்காக 202 இன்னிங்ஸ்களில் 4669 ரன்களை அடித்துள்ளார். மேலும் தோனி 19 ரன்கள் அவர் அடிக்கும் பட்சத்தில் சுரேஷ் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரராக தோனி சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதேபோன்று சென்னை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முன்னாள் சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ முதலிடத்தில் உள்ளார். சென்னை அணிக்காக 116 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ 140 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : சிஎஸ்கே இல்ல.. அந்த அணி தான் 2025 ஐபிஎல் கோப்பை ஜெய்ப்பாங்க.. கில், வருண் அசத்துவாங்க.. மைக்கேல் வாகன்

அதற்கு அடுத்து 172 போட்டிகளில் விளையாடி 133 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் ஜடேஜா 8 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் சென்னை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -