சிஎஸ்கே இல்ல.. அந்த அணி தான் 2025 ஐபிஎல் கோப்பை ஜெய்ப்பாங்க.. கில், வருண் அசத்துவாங்க.. மைக்கேல் வாகன்

Micheal Vaughan
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்குகிறது. உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் தொடராக கருதப்படும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்கு 10 அணிகள் களமிறங்குகின்றன. குறிப்பாக இன்றைய முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களுடைய சொந்த ஊரில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

அந்த வகையில் அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடிக் கோப்பையை வெல்வதற்காக தயாராக உள்ளன. அந்த அணிகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது கோப்பையை வெல்ல வேண்டும் என்பது சிஎஸ்கே ரசிகர்களின் விருப்பமாகும். ஏனெனில் அந்த அணியின் ஜாம்பவான் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 43 வயதை கடந்து விட்டதால் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறக்கூடும் என்று நிலையில் உள்ளார்.

- Advertisement -

மும்பை வெல்லும்:

எனவே ருதுராஜ் தலைமையில் இம்முறை சிறப்பாக விளையாடிய கோப்பையை வென்று தோனியை வெற்றியுடன் வழி அனுப்ப சிஎஸ்கே அணி தயாராக உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் கோப்பையை வெல்லும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கணித்துள்ளார். சென்னைக்கு முன்பாகவே 5 கோப்பைகளை வென்றுள்ள மும்பை கடந்த வருடம் ரோஹித்தை கழற்றி விட்டு பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது.

வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட அந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத மும்பை ரசிகர்களை பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் சுமாராக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனால் அதற்குப்பின் ரோகித் தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியை பாண்டியா வெல்ல உதவினார்.

- Advertisement -

மைக்கேல் வாகன் கணிப்புகள்:

எனவே தற்போது ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள பாண்டியா தலைமையில் மும்பை வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். மேலும் 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல உதவிய கொல்கத்தாவுக்காக விளையாடும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அதிக விக்கெட்டுகள் எடுப்பார் என்றும் அவர் கணித்துள்ளார். சுப்மன் கில் அதிக ரன்கள் அடிப்பார் என்றும் அவர் கணித்துள்ளார்.

இதையும் படிங்க: 38 ரன் அடிச்சா போதும்.. ஐ.பி.எல் வரலாற்றில் முதல் வீரராக கோலி நிகழ்த்த இருக்கும் சாதனை – விவரம் இதோ

இது பற்றி மைக்கேல் வாகன் ட்விட்டரில் (எக்ஸ்) பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “என்னுடைய ஐபிஎல் கணிப்புகள். மும்பை கோப்பையை வெல்லும். சுப்மன் கில் டாப் ரன்கள் அடிப்பவராக இருப்பார். வருண் சக்கரவர்த்தி அதிக விக்கெட்டுகளை எடுப்பார். ஒர்மின்ஸ்டன் சாலையில் உள்ள திண்டயல் பகுதியில் நான் எனது முடியை வெட்டுவேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement