சரியான நேரத்தில் சரியான டிசிஷன் – தோனியை வெளிப்படையாக பாராட்டிய டீ வில்லியர்ஸ் (எதற்கு தெரியுமா?)

MS Dhoni ABD Jadeja
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. வரும் மே 29-ஆம் தேதி வரை மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் 10 அணிகள் 74 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த நிலையில் முதல் போட்டி துவங்குவதற்கு ஒருநாள் முன்பாக சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அதன் நட்சத்திரம் எம்எஸ் தோனி அறிவித்தார். தற்போது 40 வயதை கடந்துவிட்ட அவர் சென்னை அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு காலம் காலமாக வகித்து வந்த கேப்டன்ஷிப் பொறுப்பை மற்றொரு சென்னை வீரர் ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.

Dhoni

- Advertisement -

மகத்தான கேப்டன்:
கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் முறையாக தொடங்கப்பட்ட போது சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி கடந்த வருடம் வரை தொடர்ந்து அபாரமாக கேப்டன்ஷிப் செய்து வந்தார். பஞ்சாப் போன்ற ஒரு சில அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கே தடுமாறிய சூழ்நிலைகளில் ஒவ்வொரு சீசனிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் குறைந்தது தனது அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார்.

அவர் தலைமையில் மொத்தம் 12 சீசன்களில் விளையாடியுள்ள சென்னை அதில் 11 சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அதில் 9 முறை இறுதிப் போட்டிகளில் விளையாடி 4 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது. அத்துடன் 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வாங்கிக் கொடுத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு வெற்றிகரமான கேப்டனாக விடை பெற்றுள்ளார். அவரின் இந்த அதிரடியான அறிவிப்பு சென்னை ரசிகர்களை மிகவும் சோகம் அடைய வைத்துள்ளது என்று கூறலாம்.

ABD

சரியான முடிவு:
இந்நிலையில் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளதாக எம்எஸ் தோனி பற்றி தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏபி டிவிலியர்ஸ் பாராட்டியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோனியின் இந்த முடிவு எனக்கு ஆச்சரியமில்லை. சொல்ல வேண்டுமெனில் அவரின் இந்த முடிவுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை நீண்ட நாளாக சுமந்து வந்த அவர் தொடர்ந்து கேப்டனாக இருப்பது எளிது என அனைவரும் நினைக்கலாம். ஆனால் அது ஒருவரை மிகவும் பாதிக்கும். ஏனெனில் கேப்டன்ஷிப் காரணமாக ஒரு சில மோசமான தருணங்களில் தூங்காத இரவுகளை சந்திக்க நேரிடும். எனவே அவர் சரியான தருணத்தில் அதிலும் தனது கடைசி போட்டியில் கோப்பையை வென்ற கையுடன் ஓய்வு பெற்றுள்ளது நல்ல முடிவாகும்” என கூறினார்.

- Advertisement -

கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னையை வழிநடத்திய எம்எஸ் தோனி கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு 4-வது முறையாக கோப்பையை வென்று கொடுத்தார். தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள அவர் அதன் காரணமாக தனது கடைசி போட்டியில் கோப்பையுடன் தனது கேப்டன்ஷிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்தார். இதைவிட கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு ஒரு நல்ல தருணம் கிடைக்காது என ஏபி டிவிலியர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Dhoni 1

சிக்சரை பார்க்க விருப்பம்:
“கடந்த சீசனுக்கு முந்தைய வருடம் அவரை மிகப்பெரிய காயப்படுத்தி இருக்கும். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு அதிலிருந்து மீண்டெழுந்து கோப்பையை வென்ற அவர் “என்னால் இப்போதும் சிறப்பாக விளையாட முடியும். ஆனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியை வேறு யாராவது ஒருவர் ஏற்றுக் கொண்டால் அதற்கு நான் உதவி செய்வேன்” என்பது போல் கூறாமல் கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே இது ஒரு மிகச்சிறந்த முடிவாகும். மேலும் அணியை வெற்றி பெற வைப்பதற்கான உத்தியைப் பற்றி கவலைப்படுவது, வீரர்களை எவ்வாறு வழிநடத்துவது போன்ற எதைப்பற்றியும் சிந்திக்காமல் மெகா சிக்ஸர்களை பறக்கவிடும் பழைய எம்எஸ் தோனியை பார்க்க விரும்புகிறேன். இப்போதைய நிலைமையில் அவர் எந்தவித கவலையுமின்றி களத்தில் இறங்கி பெரிய சிக்சர்களை அடித்து உலகம் முழுவதிலும் இருக்கும் ரசிகர்களை மகிழ்வித்து போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்” என இதுபற்றி ஏபி டி வில்லியர்ஸ் மேலும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : மும்பை – டெல்லி ! வெல்லப்போவது யார்? முன்னோட்டம், வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் ரிப்போர்ட் இதோ

கடந்த 2020-ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய அவமானத்தைச் சந்தித்தது. ஆனால் அதற்காக அசராத தோனி அதற்கு அடுத்த வருடமே அபாரமாக செயல்பட்டு 4-வது முறையாக கோப்பையை வென்று கொடுத்தார். அதன் காரணமாக வயதானாலும் தனது கேப்டன்ஷிப் திறமையை நிரூபித்த அவர் வருங்காலத்திற்காக எடுத்த இந்த முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஏபி டிவில்லியர்ஸ் இனி எஞ்சிய நாட்களில் எந்தவித கவலையுமின்றி பெரிய சிக்சர்களை பறக்கவிடும் பழைய தோனியை பார்க்க விரும்புவதாக தனது விருப்பத்தை தெரிவித்தார்.

Advertisement