தோனியின் கொரோனா டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு. ரசிகர்கள் மகிழ்ச்சி – விவரம் இதோ

Dhoni

கொரோனோ அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக தயாராகிவரும் வீரர்களுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக குறைந்தபட்சம் 4 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.

ipl

அதன் பிறகு வரும் ரிசல்ட் அடிப்படையில் தான் வீரர்கள் இத்தொடரில் விளையாட முடியும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு அணி வீரர்களும் தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் தற்போது நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ராசியில் கொரோனா பரிசோதனையை முதன் முறையாக செய்து கொண்டார்.

கடந்த ஓராண்டாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து தோனி மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தோனி முதன் முறையாக பரிசோதனை செய்து கொண்டார். அவரது பரிசோதனைக்கான அனைத்து மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

Dhoni

இந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்து தோனி 14ஆம் தேதியன்று ராஞ்சியில் சென்னைக்கு புறப்படுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ராஞ்சி குருநானக் மருத்துவமனையில் இருந்து வெளியான முடிவுகளின் படி தோனிக்கு கொரோனா நெகட்டிவ் என வந்தது. எனவே தோனி ஐபிஎல்லில் ஆடுவது உறுதியாகியுள்ளது. தோனிக்கு கொரோனா நெகட்டிவ் என்ற தகவலை அறிந்ததும் ரசிகர்களும் உற்சாமாடைந்துள்ளனர. மேலும் சென்னைக்கு வந்ததும் மீண்டும் மூன்று முறை கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள உள்ளார்.

- Advertisement -

Dhoni

அதன்பிறகு ஐக்கிய அரபு அமீரகம் பயணத்துக்கு முன்னரும் சி.எஸ்.கே வீரர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திசாந்த் யாக்னிக் மற்றும் கிங்ஸ் லெவன் அணியின் பேட்ஸ்மேன்கள் கருண் நாயர் ஆகியோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.