CSK vs DC : எது நல்ல ஸ்கோர்ன்னு எனக்கே தெரியல. வெற்றிக்கு பிறகு வெளிப்படையாக பேசிய – கேப்டன் தோனி

MS Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 55-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

CSK vs DC

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டை இழந்து 140 ரன்கள் மட்டுமே குவித்ததால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சென்னை அணி கேப்டன் தோனி கூறுகையில் : இரண்டாவது இன்னிங்ஸில் போது பந்து நிறைய திரும்பியது இதன் காரணமாகவே எங்களது சுழற்பந்து வீச்சாளர்களை நாங்கள் அதிக அளவில் பயன்படுத்தினோம்.

அதோடு மைதானம் ஸ்லோவாக இருந்ததால் எது நல்ல ஸ்கோர் என்பது உண்மையிலேயே எங்களுக்கு தெரியவில்லை. எனவேதான் எங்களது அணியின் பந்துவீச்சாளர்களை கட்டுக்கோப்புடன் பந்து வீச கேட்டுக் கொண்டேன். அதேபோன்று எல்லா பந்திலும் விக்கெட் கிடைத்து விடாது எனவே ஒவ்வொரு பந்தினையும் கவனமாக வீசவேண்டும் என்று கூறினேன்.

- Advertisement -

இந்த மைதானத்தில் 166 முதல் 170 ரன்கள் வரை நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன். ஆனாலும் இன்னும் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இருப்பினும் இந்த போட்டியில் மொயின் அலி, ஜடேஜா ஆகியோருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது நல்லது தான். ஏனெனில் நாம் தற்போது தொடரின் கடைசி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இதையும் படிங்க : வீடியோ : படையப்பா எண்ட்ரி, கண்ணான கண்ணே பாசம், சஹாரை வம்பிழுத்த சேட்டை – ஒரே போட்டியில் தல தோனியின் 3 முகம்

எனவே அனைத்து வீரர்களும் சில பந்துகளை எதிர் கொண்டால்தான் அவர்களது நம்பிக்கையும் அதிகரிக்கும். உண்மையிலேயே இந்த போட்டியில் அடைந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது அணியின் வெற்றிக்கு நானும் பங்களித்ததில் மகிழ்ச்சி என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement