சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு அடுத்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக கடந்த 2024 ஐபிஎல் தொடரின் போது புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியை தலைமை தாங்குவார் என்று அறிவித்திருந்தார். அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனானது இப்படித்தான் : எம்.எஸ் தோனி
இதனால் அவரது கேப்டன்சி மீது சில விமர்சனங்களும் எழுந்தது. ஏற்கனவே ஜடேஜா கேப்டனாக மாற்றப்பட்ட போது தோனியின் தலையீடு அதிகமாக இருந்ததாலே அவரால் கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியவில்லை என்ற விமர்சனம் இருந்தது. அதேபோன்று தற்போது ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சி செய்கையிலும் தோனி அதிகளவு கட்டளையிடுகிறார் என்ற பேச்சுக்களும் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த விவகாரங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் கேப்டனானது எப்படி? என்றும் அவரிடம் தான் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக என்ன சொன்னேன்? என்பது குறித்த பல்வேறு தகவல்களை தோனி பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ருதுராஜ் கெய்க்வாட் கடந்த பல ஆண்டுகளாகவே எங்களது அணியில் இருந்து வந்துள்ளார்.
அவரிடம் உள்ள முன்னேற்றம் மற்றும் அவர் போட்டியை அணுகும் விதம், அமைதியான குணம், உன்னிப்பான கவனம் என பல்வேறு வகையான திறன்களை வைத்து தான் அவரை கேப்டன் பதவிக்கு சரியான நபராக நாங்கள் தேர்வு செய்தோம். அதேபோன்று கடந்த ஆண்டு நான் அவரது முடிவுகளில் எந்த ஒரு தலையீடும் வைத்தது கிடையாது. எந்த அளவிற்கு அவர் சுதந்திரமாக தனது முடிவுகளை எடுக்க வேண்டுமோ அந்த அளவுக்கு அவரது சுதந்திரத்தில் விட்டு விட்டேன்.
அதேபோன்று இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கூட அவரிடம் நிறைய பேசினேன். அதிலும் குறிப்பாக : நான் உனக்கு நிறைய அறிவுரைகளை வழங்கமாட்டேன். ஒருவேளை நான் உனக்கு போட்டியின் போது அட்வைஸ் கொடுத்தாலும் அதை நீ பாலோ செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் கிடையாது.
இதையும் படிங்க : இந்தியாவுக்காக 40, 60களில் நிற்காத விராட் கோலி.. 2022இல் விழுந்தப்போ இந்த மெசேஜ் தான் கொடுத்தேன்.. தோனி பேட்டி
உனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே செய். குறிப்பாக நான் உன்னை விட்டு விலகியே நிற்பேன் அப்பொழுதுதான் கேப்டனாக உங்களால் சுதந்திரமான முடிவை எடுக்க முடியும் என்று கூறிவிட்டதாக தோனி தெரிவித்துள்ளார். இதன் மூலம் தான் எந்த விதத்திலும் ருதுராஜின் முடிவுகளில் தலையிடுவதில்லை என்பதை தோனி உறுதி செய்துள்ளார்.



