
எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர்கள் விளையாடுவார்களா? என்பதே பலரது மத்தியிலும் இருக்கும் முக்கிய கேள்வியாகவும் இருந்து வருகிறது.
ஏனெனில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்ற அவர்கள் தற்போது ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக வயது மூப்பு மற்றும் பார்ம் காரணமாக அவர்கள் வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இன்றளவும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடி வருகின்றனர்.
அதனால் அடுத்த 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் இந்த 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர்கள் இருவரும் இடம் பெறுவார்களா? என்ற கேள்விக்கு முன்னாள் இந்திய வீரரான எம்.எஸ் தோனியும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னைப் பொறுத்தவரை உடற்தகுதியை வயது தீர்மானிக்காது. எனவே அடுத்த உலக கோப்பை தொடரில் அவர்கள் இருவரும் ஏன் விளையாடக்கூடாது? பர்பார்மென்ஸ் மற்றும் பிட்னஸ் ஆகியவை தான் அவர்களது இடத்தை தீர்மானிக்கும்.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியின் என்னுடைய பிளேயிங் லெவன் இதுதான் – யுஸ்வேந்திர சாஹல் தேர்வு
உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அனுபவம் மற்றும் பிட்னஸ் இருந்தால் ஏன் விளையாடக்கூடாது? அவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டால் அணியில் இருப்பார்கள். சிறப்பாக செயல்படவில்லை என்றால் அணியில் இருக்க மாட்டார்கள் என்று எம்.எஸ் தோனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.