CSK vs LSG : டாசிற்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது குறித்து – மனம் நெகிழ்ந்த தோனி

MS-Dhoni
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன. அதன்படி இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசும் என்று அறிவித்தது.

csk vs lsg

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களை குவித்தது. பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது லக்னோ அணியானது விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசுக்கு பிறகு மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் டாசுக்கு பின்னர் தோனி சேப்பாக்கம் மைதானம் குறித்து கூறியதாவது :

MS Dhoni SIX

மீண்டும் நாங்கள் எங்களது சொந்த மண்ணில் விளையாட திரும்பி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரானது துவங்கியதிலிருந்து பெரிய அளவில் நாங்கள் இங்கு விளையாடவில்லை. ஐந்து ஆறு சீசன்கள் மட்டுமே சேப்பாக்கத்தில் விளையாடி உள்ளோம்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது முதல் முறையாக முழு ஸ்டேடியமும் நிரம்பி இருக்க ரசிகர்கள் மத்தியில் நாங்கள் விளையாட இருக்கிறோம். முன்பெல்லாம் சில பெவிலியனில் சில பகுதிகள் காலியாக இருக்கும். ஆனால் தற்போது சேப்பாக்கம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பிய நிலையில் நாங்கள் தற்போது விளையாட இருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இதையும் படிங்க : வீடியோ : மார்க் வுட்’டை அடுத்தடுத்த சிக்ஸர்களால் தெறிக்க விட்ட தல தோனி – ஐபிஎல் வரலாற்றில் 2 மாஸ் வரலாற்று சாதனை

கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் தான் விளையாடுகிறோம். இன்றைய போட்டியை பொறுத்தவரை ஆட்டத்தின் போக்கிலேயே செல்லலாம் என்ற முடிவையும் எடுத்துள்ளோம் நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement