ஒரே வார்த்தையை கூறி சி.எஸ்.கே ரசிகர்களை மகிழ்வித்த தல தோனி – அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக ஐசிசி நடத்திய அனைத்து கோப்பைகளையும் வெற்றி பெற்று கொடுத்த மகத்தான கேப்டன் என்ற பெயர் எடுத்தவர். அதோடு ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியின் கேப்டனாக இருந்து வரும் தோனி இதுவரை நான்கு முறை கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார். அண்மையில் 41 வயதை எட்டி அவர் கடந்த ஆண்டே ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

MS Dhoni vs MI

- Advertisement -

ஆனால் இந்த வருடமும் கேப்டனாக விளையாடுவேன் என்று ஏற்கனவே ஐபிஎல் தொடர் முடிவின்போது பரபரப்பான அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து இருந்தார். அதற்கேற்றார் போல் தற்போது பிசிசிஐயும் அடுத்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரானது பழைய முறைப்படி ஹோம் கிரவுண்டில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

அதாவது ஒவ்வொரு அணியும் தங்களது சொந்த மண்ணில் 7 போட்டிகளையும், எதிரணிகளின் மைதானங்களில் 7 முறையும் மோதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிஎஸ்கே அணியானது மீண்டும் சென்னை சேப்பாக்கத்தில் 7 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் முடிந்த பின்னர் தோனி ஓய்வு பெற அதிகமாக வாய்ப்பு உள்ளது.

Dhoni

ஏனெனில் ஏற்கனவே தோனி வெளியிட்டிருந்த ஒரு கருத்தில் நிச்சயம் சென்னை ரசிகர்களின் மத்தியில் நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு தான் ஓய்வு பெறுவேன் என்று கூறியிருந்தார். அதன் காரணமாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடரோடு அவர் ரசிகர்கள் மத்தியில் பிரியாவிடை பெறுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தோனி கூறியுள்ள ஒரு வார்த்தை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி பேசுகையில் : சேப்பாக்கம் மைதானத்திற்கு நாங்கள் மீண்டும் அடுத்த வருடம் வருவோம் சென்னை ரசிகர்களின் முன்னிலையில் நாங்கள் நிச்சயம் எங்களது பலமான கம்பேக் கொடுப்போம் என்று பேசியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs RSA : சவாலான இலக்கை நிர்ணயித்த தெ.ஆ – எளிதாக துரத்திய இந்திய அணி – வெற்றி பெற்றது எப்படி?

தோனியின் இந்த வார்த்தையை கேட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அவரை கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறிய சென்னை அணியானது இம்முறை நிச்சயம் சென்னை மைதானங்களில் நடைபெறும் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றும் என்றும் தற்போதே ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement