CSK vs RR : இலக்கை துரத்தி கிட்ட போயி தோத்ததும் நல்லதுதான். தோல்விக்கு பிறகு – எம்.எஸ் தோனி பேசியது என்ன?

MS-Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசும் என்று அறிவித்தது.

Jadeja

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது. பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சென்னை அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இலக்கினை வெகு சிறப்பாக துரத்திய ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் கடைசி ஓவர் வரை சென்று வெற்றியை தவறு விட்டாலும் அவர்கள் அளித்த போராட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது.

Dhoni

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : மிடில் ஓவர்களில் இன்னும் நிறைய ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்திருக்க வேண்டும். இந்த மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு நல்ல உதவி கிடைத்தது. அதிலும் குறிப்பாக அனுபவ சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் ரன் குவிக்க முடியாமல் போனது.

- Advertisement -

ஆனாலும் இது பேட்ஸ்மேன்களால் மட்டுமே கிடைத்த தோல்வி கிடையாது. இலக்கை மிக அருகில் சென்று தவறவிட்டு விட்டோம். கடைசி பார்ட்னர்ஷிப்பாக இவ்வளவு அருகில் நாங்கள் சென்றதும் பிற்பகுதியில் ரன் ரேட்டில் நமக்கு உதவி செய்யும். இது ஒரு பெரியதொடர் எனவே இது போன்ற நெருக்கமான தோல்வியும் நல்லது தான்.

இதையும் படிங்க : IPL 2023 : முதல் 5 – 6 வருசத்துல விராட் கோலி இப்டி தான் விளையாடினாரு, அவர் பெரிய அளவில் வருவாரு பாருங்க – இளம் வீரரை பாராட்டும் கைப்

இந்த போட்டியில் நமது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர். எனக்கு இந்த 200-வது போட்டி கேப்டனாக இருக்கும் சாதனை எல்லாம் பெரிய விடயம் கிடையாது. என்னை பொறுத்தவரை போட்டியின் முடிவுகள் தான் முக்கியம் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement