CSK vs PBKS : பேட்டிங் எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா நாங்க தோக்க இதுதான் காரணம் – தோனி வெளிப்படை

MS Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் போட்டியானது சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷிகார் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

CSK vs PBKS

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் டேவான் கான்வே 92 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

அதனை தொடர்ந்து 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் :

Livingstone

நாங்கள் இன்னும் வெற்றிக்கு தேவையான பிரிப்பரேஷனை செய்ய வேண்டியது அவசியம். கடைசி கட்ட ஓவர்களில் இன்னும் நாங்கள் பேட்டிங்கில் அதிரடி காட்டியிருக்க வேண்டும். குறைந்தது இன்னும் 10 முதல் 15 ரன்களாவது அதிகமாக அடித்திருக்க வேண்டும். அதே வேளையில் எங்களது பவுலிங்கிலும் இன்னும் சாதகமாக இருக்க வேண்டியது அவசியம்.

- Advertisement -

ஏனெனில் எங்களது பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக ரண்களை குவித்தாலும், பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. 200 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் போதுமான ரன்கள் தான். ஆனாலும் எங்களது பந்துவீச்சாளர்கள் சரியாக பந்து வீசவில்லை என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

இதையும் படிங்க : வீடியோ : 18 டூ 124, பட்லருக்கு பதிலாக மும்பையை தனி ஒருவனாக சிதைத்த ஜெய்ஸ்வால் – 1000வது போட்டியில் சரவெடி சாதனை

எங்களிடம் இருக்கும் தற்போதைய குறை பந்துவீச்சு மட்டுமே. சரியான திட்டத்துடன் பந்துவீச்சாளர்கள் பந்து வீச வேண்டும். பதிரானா மிகச் சிறப்பாக பந்து வீசினார். முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் இன்னும் சரியாக பந்து வீச வேண்டும் என்பதை அறிந்து பந்து வீச வேண்டும் என தோனி தோல்வி குறித்து கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement