நான் முன்பை மாதிரி அவ்ளோ ஃபிட்டா இல்ல.. அதற்காக நிறைய உழைக்கிறேன் – தல தோனி ஓபன்டாக்

MS-Dhoni
- Advertisement -

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2020-ஆம் ஆண்டே ஓய்வை அறிவித்திருந்தாலும் அதன்பிறகு தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது 43 வயதை எட்டியுள்ள மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக அன்கேப்டு வீரராக நான்கு கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

பிட்னஸ்-க்காக நான் செய்யம் செயல்கள் :

தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவார் என்பதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு தோனி எத்தனை போட்டிகளில் விளையாடுவார், எப்படி விளையாடுவார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

தற்போது 43 வயதாகும் தோனி நிச்சயம் இந்த சீசனுக்கு பிறகு விளையாட மாட்டார் என்பதனால் இந்த சீசனில் அவரது உடல்நிலை மற்றும் பிட்னஸ் எவ்வாறு இருக்கிறதோ அதனை பொறுத்து தான் போட்டிகளில் தான் விளையாடுவார் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மகேந்திர சிங் தோனி தனது பிட்னஸ் குறித்தும் அன்றாட செயல்பாடுகள் குறித்தும் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னால் முன்பை போல பிட்னஸ் உடன் இருக்க முடியவில்லை. ஆனால் பிட்னஸ் உடன் இருப்பதற்காக ஏராளமான விஷயங்களை செய்து வருகிறேன். குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவதற்காக உணவு பழக்கங்களில் சில மாற்றங்களை செய்துள்ளேன்.

- Advertisement -

வேகப்பந்துவீச்சாளர் அளவிற்கு ஒரு பேட்ஸ்மேனாக எனக்கு அவ்வளவு பிட்னஸ் தேவையில்லை என்றாலும் சரியான பிட்னஸ் உடன் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் உணவிற்கும் உடற்பயிற்சி கூடத்திற்கும் இடையே நிறைய செயல்பாடுகளை செய்து வருகிறேன். அந்த வகையில் நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் டென்னிஸ், பேட்மிட்டன், கால்பந்து ஆகியவற்றை விளையாடுகிறேன்.

இதையும் படிங்க : “பிங்க்” நிற கேப் அணிந்து 5 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணி – என்ன காரணம்?

இதுபோன்ற மற்ற விளையாட்டுகளின் மூலம் நான் புத்துணர்ச்சி அடைந்து உடற்தகுதியை பெற்று வருவதாக நினைக்கிறேன். முன்பை போன்ற பிட்னஸ் இல்லை என்றாலும் இந்த ஆண்டு விளையாடும் அளவிற்கு நான் தயாராகுவேன் என்று தோனி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement