“பிங்க்” நிற கேப் அணிந்து 5 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணி – என்ன காரணம்?

Pink
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தற்போதைய நிலையில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.

பிங்க் கேப் அணிந்து விளையாட இருக்கும் ஆஸி வீரர்கள் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது வரும் ஜனவரி 3-ஆம் தேதி சிட்னி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இந்திய அணியால் சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த கடைசி போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த கடைசி போட்டியில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் நேற்று பிங்க் நிற தொப்பி அணிந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான கிளென் மெக்ராத்துடன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர்.

இப்படி ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் பிங்க் நிற தொப்பி அணிந்து கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட காரணம் யாதெனில் : ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சிட்னியில் நடைபெறும் ஏதாவது ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பிங்க் நிற கேப் அணிந்து விளையாடுவது வழக்கம். அதற்கு காரணம் யாதெனில் :

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான கிளென் மெக்ராத் கேன்சர் நோயாளிகளுக்கு உதவும் டிரஸ்ட் ஒன்றை கடந்த பல ஆண்டுகளாகவே நடத்தி வருகிறார். கேன்சரின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையிலும் அவர் ஆண்டுதோறும் இப்படி ஒரு போட்டியை நடத்துவது வழக்கம்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய மண்ணிலும் என்னோட சிஷ்யன் அசத்த இதுதான் காரணம் – ஜெய்ஸ்வாலின் பயிற்சியாளர் பகிர்வு

அந்த வகையில் தான் தற்போது கிளென் மெக்ராத்தின் டிரஸ்டிற்கு நிதி திரட்டும் வகையிலும், கேன்சருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement