நான் இம்பேக்ட் பிளேயர் இல்ல.. இப்போல்லாம் ஈஸியா 250 – 280 ரன்ஸ் அடிக்க காரணமே வேற.. தோனி பேட்டி

MS Dhoni
- Advertisement -

ஐபிஎல் 2025 உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்கி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக 10 அணிகள் விளையாடி வருகின்றன. முன்னதாக ஒரு காலத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 ஓவரில் 250 ரன்கள் அடிப்பது சவாலான விஷயமாகும். ஆனால் ஐபிஎல் வந்தது முதலே 20 ஓவர் கிரிக்கெட்டில் 200 ரன்கள் எளிதாக அடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பிட்ச், சிறிய பவுண்டரி அளவுகள் ஆகியவற்றுடன் பேட்ஸ்மேன்களும் ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற படுத்து உருண்டு வெறித்தனமாக பேட்டிங் திறமைகளை வளர்த்துள்ளார்கள். அது போக நோபால் போட்டால் ஃபிரீ ஹிட் உட்பட நிறைய அடிப்படை விதிமுறைகள் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கிறது. இதற்கிடையே இம்பேக்ட் வீரர் என்ற விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இம்பேக்ட் பிளேயர்:

அந்த விதிமுறையின் படி ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் விளையாடலாம். அதைப் பயன்படுத்தி இப்போதெல்லாம் நிறைய அணிகள் அசால்டாக 250 ரன்கள் அடிக்கின்றன. குறிப்பாக ஹைதராபாத் மட்டும் கடந்த 2 வருடங்களில் 2 முறை 280 ரன்களை தாண்டி டாப் 5இல் 4 ஐபிஎல் ஸ்கோர்களை பதிவு செய்து சாதனைப் படைத்துள்ளது. அதனால் இம்பேக்ட் வீரர் விதிமுறை நீக்கப்பட வேண்டும் என்று ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் கடந்த வருடம் மறைமுகமாக விமர்சித்தனர்.

குறிப்பாக இம்பேக்ட் வீரர் விதிமுறை ஒரு ஆல்ரவுண்டர் உருவாவதைத் தடுப்பதாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த விதிமுறைக்கு ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ஜியோஹாட்ஸ்டார் சேனலில் பேசியது பின்வருமாறு. “அந்த விதிமுறை செயல்படுத்தப்பட்ட போது நானும் அது தேவையற்றது என்று கருதினேன்”

- Advertisement -

தோனி ஆதரவு:

“ஒரு வழியில் அது உதவினாலும் அதே வழியில் அது உதவுவதில்லை. இப்போதும் நான் விக்கெட் கீப்பிங் செய்கிறேன். நான் இம்பேக்ட் பிளேயர் கிடையாது. அதனால் விளையாட்டில் ஈடுபாட்டுடன் விளையாடுகிறேன். இருப்பினும் நிறைய மக்கள் அந்த விதிமுறை அதிக ரன்கள் குவிப்பதற்கு காரணமாக இருப்பதாக சொல்கின்றனர்”

இதையும் படிங்க: அது வரை மேட்ச் முடியாது.. அசுட்டோஸை வீடியோ காலில் வாழ்த்திய குரு தவான்.. பீட்டர்சன் பூரிப்புடன் பாராட்டு

“ஆனால் சூழ்நிலை, மனநிலை மற்றும் வீரர்களின் கச்சிதன்மை காரணமாகவே அதிக ரன்கள் அடிக்கப்படுகிறது. எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் விளையாடுவதால் கிடையாது. அதாவது தற்போது எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் இருக்கிறார் என்ற மனநிலையுடன் அனைத்து அணிகளும் இன்னும் அதிக அதிரடியாக விளையாடுகிறார்கள். அதிக ரன்கள் குவிக்க அணியில் இருக்கும் அனைத்து 4 அல்லது 5 எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்களும் பயன்படுத்தப்படுவதில்லை. அது அவர்கள் மீதான தன்னம்பிக்கையால் அடிக்கப்படுகிறது. இப்படித்தான் டி20 கிரிக்கெட் உருமாறியுள்ளது” என்று கூறியுள்ளார்.

Advertisement