டாஸின் போது தனது குறும்பு தனத்தை தனக்கே உரித்தான பாணியில் காண்பித்த தல தோனி – இதை கவனிசீங்களா ?

Dhoni-1
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது 13 ஆவது சீசனுக்கான முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே துவங்கியுள்ளது. அபுதாபியில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதனை தொடர்ந்து இந்த போட்டியில் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரத்தை தெரிவித்தார்.

CskvsMi

- Advertisement -

மேலும் முக்கிய வீரர்களான ஆல்ரவுண்டர் பிராவோ மற்றும் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ஆகியோர் விளையாடவில்லை. பிராவோக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் இளம் வீரரான சாம் கரன் மற்றும் தாஹிர்க்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நெகிடி ஆகியோர் விளையாடுகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துவக்க வீரராக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக வீரரான முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வாட்சனுடன் இணைந்து முரளி விஜய் துவக்க வீரராக களமிறங்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் டாஸ் நிகழ்வின் போது தோனி தனக்கே உரிதான பாணியில் தனது குறும்பு தனத்தை வெளிக்காட்டியது அனைவரையும் கவர்ந்தது.

csk-vs-mi

பொதுவாகவே தோனி ஆடுகளத்திலும், சரி வெளியிலும் சரி தனது குறும்புத்தனத்தின் அவ்வப்போது சில செயல்களில் ஈடுபடுவார். அந்த வகையில் தற்போது இந்த போட்டியின் டாசிற்குப் பிறகு முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்த அவர் போட்டியின் தொகுப்பாளரான முரளிகார்த்திக் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது எனக்கு இந்த போட்டியில் ஒரு விஷயம் தெரிய வேண்டும் எங்களால் ஸ்லிப் திசையில் பீல்டிங் நிற்க வைக்க முடியுமா ? ஏனெனில் சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டுமே என்று ஜாலியாக தனது குறும்பினை வெளிப்படுத்தினார்.

Dhoni

கொரோனா பாதிப்பிற்கு பிறகு துவங்கியுள்ள முதல் போட்டியில் அதை வைத்தே தனது இயல்பான மனநிலையை தோனி வெளிக்காட்டியுள்ளார். தற்போது முதல் பேட்டிங்கை விளையாடி முடித்து இருக்கும் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை அடித்து உள்ளது. அடுத்து சென்னை அணி 163 ரன்களை இலக்காக கொண்டு விளையாட இருக்கிறது.

Advertisement