- Advertisement -
ஐ.பி.எல்

ஆப்ரேஷனை நான் பாத்துக்குறேன்னு சொன்னாரு.. கண் கலங்கிட்டேன்.. தோனியின் வெறித்தன சிஎஸ்கே ரசிகர் பேட்டி

ஐபிஎல் 2024 தொடர் கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோலாகலமாக மகிழ்வித்து நிறைவு பெற்றது. அதில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் 7 வெற்றிகளை மட்டுமே பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் கோப்பையை வென்று எம்எஸ் தோனியை வெற்றிகரமாக வழியனுப்பும் வாய்ப்பை சிஎஸ்கே நழுவ விட்டது ரசிகர்களுக்கு சோகமாக அமைந்தது.

இருப்பினும் இந்த வருடம் எம்எஸ் தோனி விளையாடியதை பார்த்தது அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாக அமைந்தது. ஏனெனில் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்ற அவர் 2019லயே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற் விட்டார். அப்போதிலிருந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடும் அவருக்காக இந்தியா முழுவதிலும் சிஎஸ்கே விளையாடிய அனைத்து மைதானங்களிலும் ஏராளமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர்.

- Advertisement -

தோனியின் அன்பு:
அவர்களுக்கு 42 வயதிலும் அட்டகாசமான சிக்சர்களை பறக்க விட்டு விருந்து படைத்த தோனி வயதானாலும் தம்முடைய ஃபினிஷிங் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்தார். முன்னதாக மே 10ஆம் தேதி அகமதாபாத் நகரில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு ஒரு ரசிகர் தோனியை பார்ப்பதற்காக மைதானத்திற்குள் ஓடினார்.

அப்போது ஆரம்பத்திலேயே கை கொடுக்காமல் ஓடிய தோனி அந்த ரசிகரியிடம் கொஞ்சம் விளையாடிப் பார்த்தார். இறுதியாக தோனி நின்றதும் அவருடைய காலில் விழுந்த அந்த வெறித்தனமான ரசிகர் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார். அதைத் தொடர்ந்து வழக்கம் போல மைதானம் காவலர்கள் அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். இந்நிலையில் அன்றைய நாளில் ஏன் அதிகமாக மூச்சு என்று தோனி கேட்டதாக அந்த ரசிகர் கூறியுள்ளார்.

- Advertisement -

அப்போது தனது மூக்கு பகுதியில் பிரச்சினை இருப்பதாக சொன்ன போது அதை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய உதவுவதாக தோனி கூறியதாக அந்த ரசிகர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவரைப் பார்த்ததும் நான் சரணடைய மகிழ்ச்சியில் கையை உயர்த்தி தூக்கினேன். அப்போது மஹி பாய் “நான் ஜாலியாக இருக்க முயற்சிக்கிறேன்” என்று என்னிடம் சொன்னார். அப்போது பைத்தியக்காரத்தனமாக ஓடிய நான் அவருடைய கால்களை தொட்டேன்”

இதையும் படிங்க: ரோஹித் வேண்டாம்.. ஜெய்ஸ்வாலுடன் அவரை ஓப்பனிங்கில் இறக்குங்க.. காரணத்துடன் வாசிம் ஜாஃபர் தேர்வு

“அவர் ஒரு ஜாம்பவான். அவரைத் தொட்டதால் என் கண்கள் கலங்கின. அப்போது என்னிடம் அவர் ஏன் நீ இவ்வளவு மூச்சு வாங்குகிறாய் என்று கேட்டார். என்னுடைய மூக்கில் ஒரு பிரச்சனை இருக்கும் சூழ்நிலையில் களத்திற்குள் தாண்டி குதித்து ஓடியதால் எனக்கு மூச்சு வாங்கியது. அதை அவரிடம் சொன்ன போது ” நான் உன்னுடைய அறுவை சிகிச்சையை பார்த்துக்கொள்கிறேன். கவலைப்படாதே உனக்கு எதுவும் ஆக விடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தோனி எண்னிடம் சொன்னார்” எனக் கூறினார்.

- Advertisement -