கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ஜெர்ஸி நம்பர் 7 – தேர்வு செய்ததன் பின்னணியை பகிர்ந்த எம்எஸ் தோனி

Dhoni
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெற இருக்கும் இந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் பைனல் உள்ளிட்ட நாக்-அவுட் சுற்று போட்டிகள் அஹமதாபாத் நகரில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரில் இந்த வருடம் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் 60 போட்டிகளுக்கு பதிலாக 74 போட்டிகள் கொண்ட வரலாற்றின் மிகப்பெரிய ஐபிஎல் தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.

ipl

- Advertisement -

இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளன.

சென்னையில் தல தோனி:
குறிப்பாக கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்காக மும்பை, பெங்களூரு போன்ற இதர அணிகளை காட்டிலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே குஜராத் மாநிலம் சூரத் நகரில் வலை பயிற்சியை துவங்கியது.

இந்த ஐபிஎல் தொடருக்காக மற்ற அணிகளின் ரசிகர்களை காட்டிலும் சென்னை மற்றும் அதன் கேப்டன் எம்எஸ் தோனியின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்தியாவுக்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரரான அவர் கடந்த 2019 உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். கடந்த 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அப்போது முதல் இப்போது வரை தனது அபாரமான கேப்டன்ஷிப் அசத்தலான விக்கெட் கீப்பிங் மற்றும் அதிரடியான பினிஷிங் என சென்னை மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்த அவரை தமிழக ரசிகர்கள் “தல” என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

ஜெர்ஸி நம்பர் செய்யும் மேஜிக்:
சொல்லப்போனால் அவர் கேப்டன்ஷிப் செய்ததன் காரணமாகவே இந்தியா முழுவதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள் எனக் கூறலாம். ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாது இந்தியாவிற்காகவும் பல சாதனைகளை படைத்த அவருக்கு இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இன்று இந்திய அணியில் விளையாடும் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா போன்ற ஸ்டார் வீரர்கள் அவரின் ரசிகர்கள் என அனைவரும் அறிவார்கள்.

Dhoni

பொதுவாக தோனி என்றாலே அற்புதமான கேப்டன்ஷிப், மின்னல் வேக விக்கெட் கீப்பிங், அதிரடியான பினிஷிங் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது. ஆனால் அதையும் தாண்டி அவர் அணிந்து விளையாடும் ஜெர்சியில் பயன்படுத்தப்படும் 7-வது நம்பர் பல ரசிகர்களையும் இளைஞர்களையும் கவர்ந்த ஒரு மேஜிக் நிறைந்த நம்பர் என்று கூறினால் மிகையாகாது. ஏனெனில் அவரைப் பின்பற்றும் இந்தியாவில் உள்ள பல ரசிகர்களும், இளைஞர்களும், இளம் கிரிக்கெட் வீரர்களும் அந்த 7 எனும் நம்பரை தங்களது வாழ்வில் ஏதோ ஒரு வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று கூறலாம்.

- Advertisement -

ருசிகர பின்னணி:
இன்னும் சொல்ல வேண்டுமெனில் கால்பந்து விளையாட்டில் 7-வது நம்பர் ஜெர்ஸிக்கு கிறிஸ்ட்டியனோ ரொனால்டோ புகழ் பெற்றவர் என்றால் கிரிக்கெட்டில் எம்எஸ் தோனி புகழ் பெற்றவராக உள்ளார். அந்த அளவுக்கு ஒரு மேஜிக் நம்பராக இருக்கும் அந்த 7-வது நம்பரை எதற்காக எதன் பின்னணியில் தேர்வு செய்தேன் என எம்எஸ் தோனி தற்போது மனம் திறந்துள்ளார்.

Dhoni

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நிறைய பேர் 7 எனது அதிர்ஷ்டம் நிறைந்த நம்பர் என்பதால் நான் தேர்வு செய்தேன் என நினைக்கிறார்கள். ஆனால் அதை நான் ஒரு எளிய காரணத்துக்காக தேர்வு செய்தேன். அதாவது நான் ஜூலை மாதம் 7-வது நாளன்று பிறந்தேன். எனவே ஒரு வருடத்தின் 7-வது மாதத்தில் 7-வது நாள் என்பதற்காக நான் அதை தேர்வு செய்தேன்.

- Advertisement -

வேறு வித்தியாசமான அர்த்தங்களைக் கொண்ட ஏதோ ஒரு நம்பரை தேர்வு செய்வதற்கு பதிலாக நான் பிறந்த தேதியையே எனது ஜெர்சி நம்பராக தேர்வு செய்தேன். இதற்காக ஆரம்ப காலங்களில் இந்த 7-வது நம்பர் உனக்கு சாதகமாக இருக்காது உனக்கு எதிராக வேலை செய்யும் என பலர் கூறினார்கள். அதற்கு எனது பிறந்த வருடம் 81. எனவே 8 – 1 = 7 என பதிலளிப்பேன். ஆனால் மற்றவர்களை பற்றி பெரிதாக கவலைப்படாத நான் அதை எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு நம்பராக நினைத்துக்கொண்டு எனது வாழ்நாளில் பயன்படுத்தி வருகிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க : வெளிநாட்டு டி20 தொடரில் பங்கேற்கும் 7 இந்திய கிரிக்கெட் வீரர்கள்! தமிழக வீரரும் உண்டு – பி.சி.சி.ஐ அனுமதி

கடந்த 1981-ஆம் ஆண்டு 7-வது மாதம் 7-வது நாள் அதாவது 7/7/1982 அன்று பிறந்த காரணத்தால் தனது பிறந்த தேதியே ஜெர்ஸியின் நம்பராக தேர்வு செய்ததாக தெரிவித்துள்ள எம்எஸ் தோனி அதைத் தவிர அதில் வேறு எந்த ரகசியமும் இல்லை என வெளிப்படையாகக் கூறினார்.

Advertisement