- Advertisement -
உலக கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு – தோனியின் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட செய்தி நிறுவனம்

இந்திய அணியை பொறுத்தவரை தோனி ஒரு மிகச் சிறந்த கேப்டனாக விளங்கியவர். மேலும் மூன்று வகையான icc தொடர்களையும் கேப்டனாக இருந்து இந்திய அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அவர் இந்த உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக பிரபல செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை பெரும்பாலும் தோனியின் பேச்சு அடிபட்டுக்கொண்டே இருக்கும் . அவர் சிறப்பாக ஆடினாலும் சரி மோசமாக அதனால்தான் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் அதிகமாக எழும்.

- Advertisement -

அப்படி ஒவ்வொரு முறையும் விமர்சனம் எழுதும்போது தோனி தனது திறமையினால் அவர்களுக்கு பதில் அளித்துள்ளார். இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்த உலக கோப்பை தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று பலரும் தகவல்களை வெளியிட்டன.ர் மேலும் ஓய்வு பெறுவதே சிறந்தது என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் தோனி ஓய்வு பற்றி வாய் திறந்து எதுவும் பேசவில்லை.

மேலும் தோனியின் அனுபவம் இந்த உலக கோப்பையை வெல்ல உதவும் என்பதால் இந்திய அணியில் தேர்வு செய்து அவரை தொடர்ந்து விளையாட வைத்து வருகின்றனர். இந்நிலையில் தோனி இந்த தொடருடன் விலகப்போவதாகவும், ஓய்வு பெறப்போகும் பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. ஆனால் இது குறித்து தோனி தரப்பிலோ அல்லது பிசிசிஐ தரப்பிலோ எந்த தகவலும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by