ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடுவதன் மூலம் இமாலய சாதனை படைத்த – தல தோனி

Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி தற்போது துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 192 ரன்கள் குவிக்க தற்போது 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

KKRvsCSK

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் சென்னை அணியின் கேப்டன் தோனி டி20 கிரிக்கெட்டில் ஒரு இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் இந்த இறுதி போட்டி மூலம் சென்னை அணியை 9-வது முறையாக வழிநடத்தும் தோனி இன்று தனது 300-வது டி20 போட்டியில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் தோனி இதுவரை 60 சதவீதம் வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளார் என அவரது ரெக்கார்ட் கூறுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியை 72 போட்டிகளில் வழி நடத்தியுள்ள அவர் 41 வெற்றிகளையும், 28 தோல்விகளையும் சந்தித்து உள்ளார்.

dhoni 1

அதேபோன்று சென்னை சி.எஸ்.கே அணியை 213 போட்டியில் வழிநடத்தியவர் 130 வெற்றிகளையும், 81 தோல்விகளையும் சந்தித்து உள்ளார். புனே அணிக்காக 14 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 5 வெற்றிகள் மற்றும் 9 தோல்விகள் ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அதிக முறை டி20 அணியை வழிநடத்திய கேப்டனாக தோனி தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement