ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி லக்னோவில் 30வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை 5 தொடர் தோல்விகளுக்கு பின் தங்களது 2வது வெற்றியைப் பெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 167 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிசப் பண்ட் 63, மிட்சேல் மார்ஷ் 30 ரன்கள் எடுத்தனர்.
சென்னைக்கு அதிகபட்சமாக ஜடேஜா, பதிரனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்னர் விளையாடிய சென்னைக்கு சாய்க் ரசீத் 27, ரச்சின் ரவீந்திரா 37 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் ராகுல் திரிபாதி 9, ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்னில் அவுட்டாகி மீண்டும் பின்னடைவை கொடுத்தனர்.
சென்னை வெற்றி:
அதனால் சென்னையின் வெற்றி கேள்விக்குறியான போது சிவம் துபே நங்கூரமாக விளையாடி 43* (37) ரன்கள் எடுத்தனர். அவருடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் தோனி 26* (11) ரன்கள் எடுத்தார். அதனால் 19.3 ஓவரில் 168-5 ரன்களை எடுத்த சென்னை 2வது வெற்றியைப் பெற்ற நிலையில் லக்னோ 3வது தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் விவரிக்க முடியாத பல்வேறு காரணங்களால் கடந்த 5 போட்டிகளில் சென்னை தோற்றதாக கேப்டன் தோனி கூறியுள்ளார். மேலும் சேப்பாக்கம் பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்ததாக தெரிவிக்கும் அவர் சொந்த மண்ணுக்கு வெளியே லக்னோவில் பிட்ச் நன்றாக இருந்தது வெற்றிக்கு உதவியதாக கூறியுள்ளார். குறிப்பாக இப்போட்டியில் பவரபிளே ஓவரில் பேட்டிங், பௌலிங் துறையில் அசத்தியதை வெற்றியை கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
கடவுளின் தோனி:
“இது நல்ல வெற்றி. இது போன்ற தொடரில் விளையாடும் போது நீங்கள் வெற்றியைப் பெற விரும்புவீர்கள். துரதிஷ்டவசமாக கடந்தப் போட்டிகள் பல்வேறு காரணங்களால் எங்கள் வழியில் செல்லவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். இது எங்கள் அணிக்கு நல்ல வெற்றி. இது எங்களுடைய மொத்த அணிக்கும் தன்னம்பிக்கையை கொடுத்து முன்னேற வேண்டிய இடங்களில் முன்னேற உதவும். கிரிக்கெட் உங்கள் பக்கம் வராத போது கடவுள் சோதனைகளால் அனைத்தையும் கடினமாக்குவார் என்பது நமக்குத் தெரியும்”
இதையும் படிங்க: 26 ரன்ஸ்.. சிரித்தவர்களின் முகத்தில் கரியை பூசிய தல தோனி 2 சரித்திர சாதனை.. சிஎஸ்கே நிம்மதி வெற்றி
“இதுவும் கடினமானப் போட்டி பவர்பிளேவில் காம்பினேஷன் அல்லது சூழ்நிலைக் காரணமாக நாங்கள் பந்து வீச்சில் தடுமாறினோம். பேட்டிங்கிலும் எங்களால் அசத்த முடியவில்லை. அதே போல தவறான நேரத்தில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். சென்னையில் இருக்கும் பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருப்பது தோல்விக்கு காரணமாக இருக்கலாம். இருப்பினும் சொந்த மண்ணுக்கு வெளியே விளையாடும் போது எங்களுடைய பேட்டிங் துறை கொஞ்சம் நன்றாக செயல்பட்டுள்ளது” என்று கூறினார்.