இதனால தான் ருதுராஜை சிஎஸ்கே கேப்டனா செலக்ட் பண்ணேன்.. 99% முடிவு 1% ஆலோசனை பற்றி.. தோனி பேட்டி

MS Dhoni 5
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது. அதனால் 6வது கோப்பையை வெல்லும் பயணத்தை ருதுராஜ் தலைமையில் சென்னை இந்த வருடம் வெற்றிகரமாக துவக்கியுள்ளது. முன்னதாக சென்னை அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனி வரலாற்றின் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

அப்படிப்பட்ட அவர் 43 வயதை தாண்டி விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்சி பொறுப்பை கடந்த வருடம் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஒப்படைத்தார். உள்ளூரில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ருதுராஜ் 2020 முதல் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வருகிறார். அதனால் அவரை தோனி அடுத்த கேப்டனாக தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றே சொல்லலாம்.

- Advertisement -

கேப்டன் ருதுராஜ்:

இந்நிலையில் தம்மைப் போலவே பொறுமையும் அமைதியுடன் இருப்பதால் ருதுராஜை அடுத்த சிஎஸ்கே கேப்டனாக தேர்ந்தெடுத்ததாக தோனி தெரிவித்துள்ளார். மேலும் என்ன தான் ருதுராஜ் கேப்டனாக இருந்தாலும் பெரும்பாலான முடிவுகளை தோனி எடுப்பதாக கடந்த வருடம் விமர்சனங்கள் எழுந்தன. அது பற்றியும் தோனி பேசியது பின்வருமாறு. “ருதுராஜ் எங்கள் அணியில் கொஞ்சம் காலமாக இருந்து வருகிறார்”

“அவரது குணம் நன்றாக இருக்கிறது. அமைதியானவர் இணக்கமானவர். அதனாலேயே அவரை தலைமைப் பதவிக்கு கருதினோம். கடந்த வருட ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாக உங்களுக்கு நான் ஆலோசனை கொடுத்தால் அதை நீங்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அவரிடம் சொல்லி விட்டேன். நான் முடிந்தளவுக்கு நான் தள்ளியிருப்பேன் என்று அவரிடம் கூறினேன்”

- Advertisement -

தோனியின் தேர்வு:

“கடந்த ஐபிஎல் தொடரின் போது நிறைய முக்கியமான முடிவுகளை நான் பின்னணியில் எடுப்பதாக மக்கள் கருதினார்கள். ஆனால் உண்மை என்னவெனில் 99% முடிவுகளை அவர் எடுத்தார். பவுலிங் மாற்றம் செய்வது, ஃபீல்டிங் நிறுத்துவது போன்ற முக்கியமான முடிவுகளை அவர் தான் எடுத்தார். அவருக்கு நான் உதவி மட்டுமே செய்தேன். வீரர்களை அவர் மிகவும் புத்திசாலித்தனமாக கையாண்டு வருகிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஒருமுறை இல்லை இரண்டு முறை மும்பை அணி தோற்றுவிட்டது.. இஷான் கிஷனின் பேன் ஆகிட்டேன் – ஹர்பஜன் சிங்

கடந்த வருடம் ருதுராஜ் தலைமையில் கடைசி வரை போராடிய சென்னை ஐந்தாவது இடத்தைப் பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. எனவே கடந்த வருடம் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தைக் கற்றுள்ள அவர் இம்முறை இன்னும் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்வார் என்று நம்பலாம். அவருக்கு தோனி தொடர்ந்து உறுதுணையாக இருப்பார்.

Advertisement