மார்ச் 23-ஆம் தேதி நடைபெற்ற 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தான அணி 242 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 44 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
மும்பை அணி ஒரேநாளில் இரண்டு முறை தோற்றுவிட்டது : ஹர்பஜன் சிங்
அதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் ஒருமுறை 13-வது ஆண்டாக தொடர்ச்சியாக ஒரு சீசனின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து மோசமான சாதனையை நிகழ்த்தி இருந்தது.
இந்நிலையில் நேற்று இந்த இரண்டு போட்டிகள் முடிவடைந்த பின்னர் பேசியிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் ஒரே நாளில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு முறை தோற்றுள்ளது என வித்தியாசமான ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை இன்று மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு முறை தோற்றுள்ளதாக நினைக்கிறேன்.
ஏனெனில் ஒரு போட்டியில் அவர்கள் சிஎஸ்கே அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள். அதேபோன்று மற்றொரு தோல்வியாக அவர்கள் இஷான் கிஷனை வெளியேற்றியதை நான் பார்க்கிறேன். ஏனெனில் இன்று அவர் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. இவரை போன்ற ஒரு வீரரை மும்பை அணி வெளியேற்றியது அவர்களது தோல்வியாக நான் கருதுகிறேன். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அனல் பறக்கும் ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.
இதன் மூலம் நிச்சயம் அந்த அணி இந்த தொடரில் ஒரு டேஞ்சரான அணியாக மாறப்போகிறது. இஷான் கிஷனின் வருகை சன்ரைசர்ஸ் அணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.. இந்த போட்டியில் அவர் ஆடிய இன்னிங்சை பார்த்து நான் அவருக்கு ரசிகனாக மாறிவிட்டேன் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே நான் ருதுராஜ் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் – தல தோனி கருத்து
அவர் கூறியது போன்றே நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்காக மூன்றாவது இடத்தில் களமிறங்கிய இஷான் கிஷன் தான் சந்தித்த முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடி இறுதியில் 47 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் என 106 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.



