அப்படி பாத்தா 22 வயசுலயே ரிட்டையராகிருக்கனும்.. 2026இல் வருவேன் வரவும் மாட்டேன்.. தோனி ட்விஸ்ட் பேட்டி

MS Dhoni 2026
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 25ஆம் தேதி நடைபெற்ற 67வது போட்டியில் குஜராத்தை 83 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோற்கடித்தது. அகமதாபாத் நகரில் மதியம் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே 231 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அந்த அணிக்கு தேவால்ட் ப்ரேவிஸ் 57, டேவோன் கான்வே 52, ஜடேஜா 21*, உர்வில் படேல் 37, ஆயுஷ் மாத்ரே 34, சிவம் துபே 17 ரன்களை அடித்து அட்டகாசம் செய்தனர்.

அடுத்ததாக விளையாடிய குஜராத்தை ஆரம்பம் முதலே அபாரமாக பவுலிங் செய்த சிஎஸ்கே 18.3 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அசத்தியது. குஜராத்துக்கு அதிகபட்சமாக சாய் சுதர்சன் 41 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணிக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத், அன்சுல் கம்போஜ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

- Advertisement -

2026இல் தோனி விளையாடுவாரா:

இதையும் சேர்த்து 4வது வெற்றியைப் பெற்ற சென்னை புள்ளிப்பட்டியலில் முதல் முறையாக கடைசியில் இடத்தைப் படித்து மோசமான சாதனை படைத்தது. இதற்கிடையே அடுத்த வருடம் தோனி விளையாடுவாரா என்பது கேள்வியாக இருக்கிறது. அது பற்றி போட்டியின் முடிவில் கேட்கப்பட்ட போது வழக்கம் போல தோனி எந்த பதிலையும் தெளிவாக சொல்லவில்லை.

மாறாக ட்விஸ்ட் வைத்துப் பேசிய அவர் கூறியது பின்வருமாறு. “இந்த வெற்றி நல்லது. இன்றைய மைதானம் ரசிகர்களால் ஹவுஸ்ஃபுல்லாக இருந்தது என்று சொல்ல மாட்டேன். எங்களுக்கு இது நல்ல வருடமாக இல்லை. இருப்பினும் இந்தப் போட்டி கச்சிதமான செயல்பாடுகளால் சிறப்பாக அமைந்தது. நாங்கள் கேட்ச்களை நன்றாக பிடிக்கவில்லை. ஆனால் இன்று அது சிறப்பாக இருந்தது. அதை வைத்தே வெற்றிகள் அமைகிறது”

- Advertisement -

தோனி வைத்த ட்விஸ்ட்:

“அடுத்த வருடம் விளையாடுவேனா? என்பதை தீர்மானிக்க இன்னும் 4 – 5 மாதங்கள் இருக்கிறது. எந்த அவசரமும் இல்லை. ஒருவேளை விளையாடினால் அதற்கு உடலை ஃபிட்டாக வைத்திருப்பது அவசியம். உங்களுக்கு நீங்களே சிறப்பாக இருக்க வேண்டும். இங்கே ஒருவர் சிறப்பாக விளையாடாமல் இருப்பதை வைத்து ஓய்வு பெற முடிவெடுக்க வேண்டுமானால் சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெற வேண்டும்”

இதையும் படிங்க:2026இல் ருதுராஜ் அந்த ஓட்டைகளை அடைச்சு சிஎஸ்கேவை மீட்பாரு.. சூர்யவன்சி அதை உணர வெச்சுட்டாரு.. தோனி பேட்டி

“தற்போதைக்கு ராஞ்சிக்கு சென்று சில பைக் பயணங்களை மகிழ்ச்சியுடன் செய்ய உள்ளேன். நான் முடித்து விட்டேன் என்றும் சொல்லவில்லை. அதே சமயம் திரும்பி வருவேன் என்றும் சொல்லவில்லை. எந்த முடிவையும் எடுக்க எனக்கு போதுமான நேரம் வசதியாக உள்ளது. அதைப் பற்றி சிந்தித்து பின்னர் முடிவு எடுப்பேன்” என்று கூறினார்.

Advertisement