- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த 2 பேரை சிஎஸ்கேவில் பாத்துருக்கேன்.. 2011 உ.கோ ஃபைனலில் யுவிக்கு முன் களமிறங்கியது பற்றி தோனி பேட்டி

ஐசிசி உலகக் கோப்பை 2011 கிரிக்கெட் தொடரை இந்தியா தங்களது சொந்த மண்ணில் வென்றதை ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது. ஏனெனில் 1983க்குப்பின் அத்தொடரில் 28 வருடங்கள் கழித்து இந்தியா தோனி தலைமையில் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதன் வாயிலாக சொந்த மண்ணில் உலகக் கோப்பை வென்ற முதல் அணியாகவும் இந்தியா உலக சாதனை படைத்தது.

முன்னதாக அந்தத் தொடரில் கேப்டன் எம்எஸ் தோனி ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி வந்தார். இருப்பினும் இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக முக்கிய நேரத்தில் களமிறங்கிய அவர் 91* ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். குறிப்பாக சச்சின், சேவாக் அவுட்டான பின் கம்பீர் – கோலி ஜோடி சேர்ந்து சரிவை ஓரளவு சரி செய்தார்கள்.

- Advertisement -

யுவ்ராஜ்க்கு முன்:

அதில் கோலி அவுட்டான போது ஃபார்மில் இருந்த யுவராஜ் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு முன் களமிறங்கிய தோனி அட்டகாசமாக விளையாடி இந்திய ரசிகர்களுக்கு புல்லரிப்பை ஏற்படுத்தும் வகையில் சிக்ஸருடன் ஃபினிஷிங் செய்தார். இந்நிலையில் அந்த மாபெரும் ஃபைனலில் யுவராஜுக்கு முன் களமிறங்கிய காரணம் பற்றி தோனி பகிர்த்துள்ளார்.

இது பற்றி சமீபத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கம்பீர் விராட் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். யுவராஜ் நல்ல ஃபார்மில் இருந்தார். எனவே யுவராஜ் செல்ல வேண்டுமா அல்லது நான் செல்ல வேண்டுமா என்ற இக்கட்டான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது எனக்குள் ஏதோ ஒரு உணர்வு இருந்ததால் நான் செல்ல விரும்பினேன். அதற்கான காரணம் அனுபவத்தைப் பொறுத்த எளிமையான ஒன்றாகும்”

- Advertisement -

சிஎஸ்கே தொடர்பு:

“இலங்கை அணியின் பவுலிங் வரிசையை பார்க்கும் போது மிடில் ஓவர்களை முரளிதரன் சார், சுராஜ் ரண்டிவ் ஆகியோருடன் பகுதி நேர பவுலர் திலகரத்னே தில்சன் வீசுவதற்காக இருந்தார். அவர்கள் மூவருமே ஆஃப் ஸ்பின்னர்கள். அதில் முரளி சார் மற்றும் சுராஜ் ஆகியோர் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளனர். அப்படியானால் அவர்களை நான் வலைப்பயிற்சியில் அதிகமாக எதிர்கொண்டிருப்பேன்”

இதையும் படிங்க: 3 பேரும் ஆடனும்.. ரிச்சர்ட்ஸ், சேவாக், ஹெட் மாதிரி.. இந்தியாவுக்கு அவர் கிடைச்சுட்டாரு.. ஹர்பஜன் பாராட்டு

“எனவே ஆஃப் ஸ்பின்னர்களான அவர்களை வலது கை பேட்ஸ்மேனான நான் எதிர்கொள்வது கொஞ்சம் எளிதாக இருக்கும். கம்பீருடன் நான் அதிகமாக பேட்டிங் செய்ததில்லை. ஆனால் ஜிம்பாப்வே, கென்யாவில் இந்தியா ஏ அணிக்காக நாங்கள் சேர்ந்து விளையாடியுள்ளோம். அதனால் எங்களுக்கிடையே நல்ல புரிதல் இருக்கிறது. அப்போது அந்த புரிதலும் இடது வலது கை ஜோடி கலவையும் தேவைப்பட்டது. இந்த ஐடியாவுடன் நான் முரளிதரன், சுராஜை ஆரம்பக்கட்ட 2 – 4 ஓவர்களில் நன்றாக எதிர்கொள்ள முடியும் என்று நினைத்தேன்” எனக் கூறினார்.

- Advertisement -