பும்ரா உலகின் சிறந்த பவுலர்.. அவரை மாதிரி பேட்டிங் செய்யாததே சிஎஸ்கே தோல்விக்கு இதான் காரணம்.. தோனி பேட்டி

Ms dhoni vs mi
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி மும்பையில் 38வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பரம எதிரி சென்னையை தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 20 ஓவரில் போராடி 177 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜடேஜா 53, சிவம் துபே 50, ஆயுஷ் மாத்ரே 32 ரன்கள் எடுத்தார்கள்.

மும்பைக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய மும்பை 15.4 ஓவரிலேயே ரன்களை எடுத்து எளிதாக தங்களுடைய 4வது வெற்றியைப் பெற்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 76*, சூரியகுமார் 68 ரன்களை அடித்து மும்பையை வெற்றி பெற வைத்தார்கள்.

- Advertisement -

சென்னை 5வது தோல்வி:

அதனால் சென்னை அணி தங்களுடைய 7வது தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் வலுவாக கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் பனி அதிகமாக இருந்த சூழ்நிலையில் 176 என்பது வெற்றிக்கு போதுமான ரன்கள் கிடையாது என்று கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை பேட்ஸ்மேன்கள் ஆயுஸ் மாத்ரே போல விளையாடாததே தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் உலகின் சிறந்த பவுலரான ஜஸ்ப்ரித் பும்ரா கடைசிக்கட்ட ஓவர்களில் அபாரமாக பவுலிங் செய்து தங்களை மடக்கியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் சராசரிக்கும் குறைவான ஸ்கோர் எடுத்தோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் இரண்டாவது பகுதியில் பனி வரும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதனால் மிடில் ஓவர்களில் நாங்கள் அதிரடியாக விளையாட வேண்டிய நிலையில் இருந்தோம்”

- Advertisement -

அதிரடி அவசியம்:

“ஆனால் தற்சமயத்தில் பும்ரா உலகின் சிறந்த டெத் பவுலராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரை வைத்து மும்பை ஆரம்பத்திலேயே டெத் ஓவர்களை துவக்கியது. அங்கே நாங்கள் அதிரடியாக வேண்டிய நிலையில் இருந்தோம். ஒருவேளை பும்ரா ரன்களை கொடுத்தாலும் அது அவர்களுக்கு பிளஸ் பாயிண்ட். நாங்கள் அதிகமாக ரன்கள் அடித்திருக்க வேண்டிய சில ஓவர்கள் இருந்தன”

இதையும் படிங்க: 15.4 ஓவரிலேயே 177.. சிஎஸ்கேவை ஓடவிட்ட மும்பை.. தவான், கிங் கோலியை முந்தி ஹிட்மேன் 2 வரலாற்று சாதனை

“பனி இருந்த சூழ்நிலையில் 175 போதாது என்பதால் அந்த ரன்கள் எங்களுக்கு வேண்டியிருந்தது. ஆயுஷ் போன்ற இளம் வீரர் சிறப்பாக பேட்டிங் செய்தார். அந்த அணுகுமுறை தான் உங்களுக்குத் தேவை. நீங்கள் உங்களது பலத்திற்கு தகுந்த ஷாட்டுகளை பயன்படுத்தி ஆரம்பம் முதலே விளையாட வேண்டும். அவரைப் போன்ற வீரர் எங்களுக்கு நல்ல அறிகுறி. அவர் மேலே இப்படி விளையாடினால் அது எங்களுடைய மிடில் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் கொஞ்சம் எளிதாக இருக்கும். பந்து வீச்சில் முதல் 6 ஓவர்களில் அதிக ரன்கள் கொடுத்து விட்டால் வெற்றி கடினமாகி விடும். சூரியகுமார் சிறப்பாக பேட்டிங் செய்தார்” என்று கூறினார்.

Advertisement