ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 4ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் 25வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் கொல்கத்தா அணியிடம் சென்னை 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 20 ஓவரில் 103/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் அதே ரன்களை கொல்கத்தா 10.1 ஓவரில் எடுத்து தங்களுடைய மூன்றாவது வெற்றியைப் பெற்றது.
அதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் பந்துகள் (59) அடிப்படையில் சென்னை மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மோசமான சாதனைப் படைத்தது. அத்துடன் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்து சென்னை வரலாறு காணாத மோசமான சாதனை படைத்துள்ளது. மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக 3 போட்டிகளில் 3 தோல்விகளை சந்தித்து சென்னை மண்ணைக் கவ்வியுள்ளது.
மோசமான தோல்வி:
இந்நிலையில் இந்த வரலாறு காணாத தோல்விக்கு சென்னை சிறப்பாக விளையாடாததே காரணம் என்று கேப்டன் எம்எஸ் தோனி கூறியுள்ளார். அதை விட சேப்பாக்கம் பிட்ச் ஒவ்வொரு முறையும் தாங்கள் நினைப்பதற்கு எதிராக செயல்படுவதே தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது எதுவும் எங்கள் வழியில் செல்லாத இரவுகளில் ஒன்றாகும். எங்களுக்கு முன் இருக்கும் சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்”
“இன்று நாங்கள் அதிக ரன்கள் அடிக்கவில்லை என்று கருதுகிறேன். கடந்தப் போட்டியில் இங்கே நாங்கள் பௌலிங் செய்த போது இரண்டாவது இன்னிங்ஸில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. அது இன்று முதல் இன்னிங்ஸில் நடந்தது. பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழந்தால் எதிரணியிடம் இருக்கும் தரமான ஸ்பின்னர்களை எதிர்த்து அசத்துவது கடினம்”
தோனி ஏமாற்றம்:
“நாங்கள் எப்போதும் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. பவர்பிளே ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே அடித்த நாங்கள் சூழ்நிலைகளை பார்த்து விளையாட வேண்டும். சில போட்டிகளில் அதை செய்த நாங்கள் எங்களுடைய திறமைக்கு ஆதரவு கொடுத்து விளையாட வேண்டும். மற்றவரின் ஆட்டத்தைப் பொறுத்த பார்க்கக் கூடாது”
இதையும் படிங்க: 5க்கு 5 தோல்வி.. மண்ணை கவ்விய சிஎஸ்கே.. ஒன்னுமற்ற டம்மி அணியாக 3 வரலாறு காணாத மோசமான சாதனை
“எங்களுடைய துவக்க வீரர்கள் நல்ல திறமைக் கொண்டவர்கள். அதற்காக அவர்கள் கண்மூடித்தனமாக அடிக்கப் பார்ப்பதில்லை. சூழ்நிலையை பார்க்க வேண்டுமே தவிர எப்படியாவது ஸ்கோர் கார்டை உயர்த்த வேண்டும் என்று பார்க்கக்கூடாது. நாங்கள் வெற்றிக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து மிடில், கடைசி ஓவர்களில் சிறப்பாக விளையாட வேண்டும். ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்தால் மிடில் ஆர்டர் தங்களது வேலையை வித்தியாசமாக செய்ய வேண்டும்” எனக் கூறினார்.



