5க்கு 5 தோல்வி.. மண்ணை கவ்விய சிஎஸ்கே.. ஒன்னுமற்ற டம்மி அணியாக 3 வரலாறு காணாத மோசமான சாதனை

Csk vs kkr 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் பதினொன்றாம் தேதி தமிழகத்தின் தலைநகர் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் 25வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி ஆரம்பம் முதலே மோசமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் வெறும் 103-9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கான்வே 12, ரச்சின் ரவீந்திரா 4, ராகுல் திரிபாதி 16, விஜய் சங்கர் 29, அஸ்வின் 1, ஜடேஜா 0, தீபக் ஹூடா 0, கேப்டன் தோனி 1 என அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் யாருமே பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதிகபட்சமாக சிவம் துபே 31* ரன்கள் அடித்து 100க்குள் ஆல் அவுட்டாகும் அவமானத்திலிருந்து காப்பாற்றினார். கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக சுனில் நரேன் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

சென்னை சொதப்பல்:

இதன் வாயிலாக தங்களுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. அடுத்து களம் இறங்கிய கொல்கத்தாவுக்கு 3 சிக்ஸர்களை பறக்க விட்டு அதிரடி காட்டிய டீ காக் 23 (16) அன்சுல் கம்போஜ் வேகத்தில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் சுனில் நரேன் அடித்து நொறுக்கி 2 பவுண்டரி 5 சிக்சருடன் 44 (18) ரன்களில் நூர் அஹ்மத் சுழலில் அவுட்டானார்.

இறுதியில் கேப்டன் ரஹானே 20* (17) ரிங்கு சிங் 15* (12) ரன்கள் எடுத்ததால் 10.1 ஓவரிலேயே 107/2 ரன்களை எடுத்த கொல்கத்தா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று தங்களது 3வது வெற்றியை பதிவு செய்தது. மறுபுறம் சென்னை கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்துள்ளது.

- Advertisement -

டம்மி டீம்:

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 5 போட்டிகளில் முதல் முறையாக தோல்வியை சந்தித்து சிஎஸ்கே மோசமான சாதனை படைத்துள்ளது. இது போக சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் சென்னை தோற்றுள்ளது. அதன் வாயிலாக சேப்பாக்கம் மைதானத்தில் 3 போட்டிகளில் தொடர்ந்து முதல் முறையாக தோற்று சிஎஸ்கே மற்றும் ஒரு மோசமான சாதனை படைத்துள்ளது

இதையும் படிங்க: சென்னை 103/9.. நொறுக்கப்பட்ட சேப்பாக்கம் கோட்டை.. சொந்த ஊரில் சொதப்பிய சிஎஸ்கே மோசமான சாதனை

மேலும் ஐபிஎல் வரலாற்றில் பந்துகள் (59) அடிப்படையில் தங்களது மிகப்பெரிய மோசமான சாதனை தோல்வியையும் சிஎஸ்கே பதிவு செய்துள்ளது. மேலும் சென்னை 20 ஓவரில் 103 ரன்கள் அடித்த அதே பிட்ச்சில் கொல்கத்தா வெறும் 10.1 ஓவரில் 107 ரன்கள் எடுத்து வென்றுள்ளது. சுனில் நரேன் போன்ற பகுதி நேர பேட்ஸ்மேன் சென்னையை அடித்து நொறுக்கியுள்ளார். இதிலிருந்து சென்னை வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு டம்மி அணியாக தோற்றுள்ளது என்பதே நிதர்சனம்.

Advertisement