ஞானிகளுக்கு இந்த சிக்னலே போதும்.. ரோஹித் படை அசத்துகிறதா? இந்தியா 2023 உ.கோ வெல்லுமா.. தோனி பேட்டி

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தி வரும் 2023 உலகக் கோப்பை 25 லீக் போட்டிகளை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய முதல் 5 போட்டிகளில் 5 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்து எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது.

குறிப்பாக முதல் போட்டியிலேயே வலுவான ஆஸ்திரேலியாவை 199 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 2/3 என்ற மோசமான துவக்கத்தை பெற்று தடுமாறினாலும் விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோரது போராட்டத்தால் சிறப்பான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்திய இந்தியா பரம எதிரி பாகிஸ்தானை 191 ரன்களுக்கு சுருட்டி உலகக்கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக வென்று கௌரவத்தை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

தோனியின் கருத்து:
அதை விட மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்தை 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஐசிசி தொடரில் வீழ்த்திய இந்தியா தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. அதன் காரணமாக 2011 போல சொந்த மண்ணில் ரோகித் தலைமையில் இந்தியா இம்முறை கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஆழமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது சமநிலையுடன் இருக்கும் இந்திய அணியில் அனைத்து வீரர்களும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவதற்காக முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார். எனவே இதுவே வெற்றிக்கான நல்ல சமிக்கை என்பதை தெரிவிக்கும் அவர் மேற்கொண்டு எதுவும் சொல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார்.

- Advertisement -

இந்தியாவுக்கு 2011 உலகக்கோப்பை உட்பட பல மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் ஓய்வுக்கு பின் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களிலிருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இது பற்றிய கேள்விக்கு அரிதாக பேசியது பின்வருமாறு. “இது மிகவும் நல்ல அணியாக இருக்கிறது. குறிப்பாக அணியின் சமநிலை மிகவும் அற்புதமாக இருக்கிறது. அதே சமயம் அணியில் இருக்கும் அனைவரும் நன்றாக விளையாடுகின்றனர்”

இதையும் படிங்க: முகமது ஷமி வேணாம். அவரை தூக்கிட்டு இவரை சேருங்க. லக்னோ பிட்ச்க்கு அதுதான் சூட் ஆகும் – விவரம் இதோ

“அதனால் அனைத்தும் நன்றாக தெரிகிறது. இதைத் தவிர்த்து நான் வேறு எதுவும் சொல்ல மாட்டேன். ஞானிகளுக்கு இந்த சிக்னலே போதும்” என்று கூறினார். அவர் கூறுவது போல ரோஹித் சர்மா, விராட் கோலி, கில், ராகுல், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, குல்தீப் ஆகியோருடன் பெஞ்சில் அமர்ந்திருந்த முகமது ஷமி கூட கிடைத்த வாய்ப்பில் 5 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார். அந்த வகையில் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்படுவதால் இம்முறை தோனி தலைமையில் நிகழ்ந்த 2011 மேஜிக் மீண்டும் அரங்கேறும் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement