2024இல் செஞ்சது ஃப்ளூக்.. கீப்பரா மட்டும் இல்லனா நான் யூஸ்லெஸ் பிளேயராக இருப்பேன்.. தோனி பேட்டி

MS Dhoni 2
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான துவக்கத்தைப் பெற்றுள்ளது. அத்தொடரில் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் ஜாம்பவான் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி 43 வயதில் அன்கேப்ட் வீரராக களமிறங்கியுள்ளார். வரலாற்றின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் கேப்டனாகவும் அறியப்படும் அவர் 43 வயதிலும் தன்னுடைய ஃபிட்னஸ் காரணமாக அசத்தி வருகிறார்.

குறிப்பாக நேற்று மும்பைக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சூரியகுமாரை வெறும் 0.12 நொடியில் அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. அதனால் வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பதை தோனி மீண்டும் நிரூபித்துள்ளார் என்றே சொல்லலாம். அதே போல கடந்த வருடம் குஜராத்துக்கு எதிராக தோனி ஒற்றைக் கையில் அற்புதமான கேட்ச் பிடித்து அசத்தினார்.

- Advertisement -

பாதுகாப்பான கீப்பர்:

இந்நிலையில் கடந்த வருடம் பிடித்த அந்த கேட்ச் ஃப்ளூக் அதாவது அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று தோனி தெரிவித்துள்ளார். மேலும் விக்கெட் கீப்பராக இல்லாமல் போயிருந்தால் தான் ஒரு பயனற்ற வீரராக போயிருப்பேன் என்றும் தோனி கூறியுள்ளார். இது பற்றி ஜியோ ஹாட்ஸ்டார் சேனலில் அவர் கொடுத்த பேட்டி பின்வருமாறு. “அது ஒரு ஃப்ளூக். அதை உன்னிப்பாக கவனித்தால் லாரியின் பின்புறத்திலிருந்து அரிசி மூட்டை விழுவது போல் இருக்கும்”

“முழு விஷயம் என்னவெனில் 2 கைகளால் பிடிக்க முடிந்தால் நான் எப்போதும் அந்த வகையிலேயே கேட்ச் பிடிக்க விரும்புவேன். ஆனால் பெரும்பாலான சமயங்களில் நான் டைவ் அடித்து ஒற்றைக் கையில் கேட்சுகளை பிடிக்கக்கூடியவன் கிடையாது. நான் கொஞ்சம் பாதுகாப்பான கீப்பர். அதையே தொடர விரும்புகிறேன். கீப்பராக செயல்படுவது கடினமானது”

- Advertisement -

மாஸ்டர் மைண்டுக்கு உதவும் கீப்பிங்:

“உண்மையில் விக்கெட் கீப்பராக இல்லாமல் போனால் நான் களத்தில் பயனற்றவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன். ஏனெனில் அங்கே தான் நான் போட்டியை மிகவும் சிறந்த சாத்தியமான வழியில் படிக்கிறேன். கோணங்கள், பவுலர் எப்படி பௌலிங் செய்கிறார், பிட்ச் எப்படி செயல்படுகிறது, எது மாறுகிறது என்பனவற்றை அங்கே நான் மிகவும் நெருக்கமாக கவனிக்கிறேன்”

இதையும் படிங்க: யார் இந்த விக்னேஷ் புத்தூர்? 30 லட்சம் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் வாங்கியதன் பின்னணி என்ன? – விவரம் இதோ

“முதல் 6 ஓவர்களில் புதிய பந்து வித்தியாசமாக செயல்படும். பின்னர் அது மாறும் அல்லது அப்படியே இருக்கும். இது போன்ற விஷயங்களை கீப்பராக இருப்பதால் அங்கே என்ன நடக்கிறது என்பதை என்னால் தீர்மானிக்க முடிகிறது. ஒரு மோசமான பந்து சிக்ஸர் சென்றதா அல்லது ஒரு நல்ல பந்தை பேட்ஸ்மேன் தனது திறமையால் சிக்சர் அடித்தாரா? போன்றவற்றை என்னால் கீப்பராக இருக்கும் போது வித்தியாசப்படுத்த முடியும்” என்று கூறினார்.

Advertisement