- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவுக்காக 12 வருஷம்.. அவரோட உறவு அண்ணன் மாதிரி.. அதுல விராட் கோலி தான் பெஸ்ட்.. தோனி பேட்டி

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியின் வளர்ச்சிக்கு முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்த விராட் கோலி தம்முடைய திறமையால் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இருப்பினும் மற்றவர்களைப் போலவே ஆரம்ப காலங்களில் விராட் கோலியும் சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாறினார்.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011இல் அறிமுகமான விராட் கோலி 2013 வரை மிகவும் தடுமாற்றமாகவே செயல்பட்டார். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 2014 டெஸ்ட் தொடரில் மிகவும் திண்டாட்டமாக விளையாடிய விராட் கோலி தன்னுடைய கேரியரின் மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் அவரை நீக்குவதற்கு தேர்வுக்குழுவும் பிசிசிஐயும் முடிவெடுத்தது.

- Advertisement -

தோனி – விராட் கோலி:

அப்போது விராட் கோலியிடம் நல்ல திறமை இருப்பதாக உணர்ந்த எம்எஸ் தோனி தேர்வுக்குழுவை எதிர்த்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்ததாக அப்போதைய துணை கேப்டன் வீரேந்திர சேவாக் கடந்த சில வருடத்திற்கு முன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதே போல தமக்குப்பின் இந்தியாவை தலைமை தாங்குவதற்கு விராட் கோலி தான் சரியானவர் என்று தோனி கருதினார்.

அதனாலேயே 2017ஆம் ஆண்டு இந்தியாவின் கேப்டன்ஷிப் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்த தோனி அவரது தலைமையில் சாதாரண வீரராக விளையாடினார். மறுபுறம் எப்போதுமே தோனி தான் தம்முடைய கேப்டன் என்று விராட் கோலி பலமுறை தெரிவித்துள்ளார். அத்துடன் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய காலங்களில் தோனி தான் தமக்கு மெசேஜ் செய்து ஆதரவு கொடுத்ததாகவும் சமீபத்தில் விராட் கோலி கூறியிருந்தார்.

- Advertisement -

அண்ணன் மாதிரி:

இந்நிலையில் சக வீரரான விராட் கோலிக்கு தாம் அண்ணனை போன்றவர் என்று தோனி கூறியுள்ளார். அத்துடன் உலக கிரிக்கெட்டில் விராட் கோலி தான் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று தோனி பாராட்டியுள்ளார். சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் விராட் கோலிக்கும் உங்களுக்கும் எம்மாதிரியான உறவு இருக்கிறது என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி பதிலளித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: எழுதி வெச்சுக்கோங்க.. இந்த காரணத்தால் சச்சினின் சாதனையை ஜோ ரூட் உடைப்பாரு.. குக், டேவிட் லாய்ட் உறுதி

“நாங்கள் இந்தியாவுக்காக 2008 – 09 முதல் விளையாடினோம். எங்களுக்கிடையே வயது வித்தியாசம் இருக்கிறது. எனவே அவருக்கு நான் பெரிய அண்ணன் போன்றவரா அல்லது சக வீரராக என்பது தெரியவில்லை. ஆனால் நாளின் இறுதியில் நாங்கள் நாட்டுக்காக விளையாடிய சக வீரர்கள். நாங்கள் இந்தியாவுக்காக நீண்ட ஒன்றாக விளையாடினோம் என்பது உங்களுக்கு தெரியும். உலக கிரிக்கெட் என்று வரும் போது விராட் கோலி மிகவும் சிறந்தவர்” என்று கூறினார்.

- Advertisement -